மன்னாகண்டலில் மணல் வியாபாரி கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் அனுமதியற்ற முறையில் 22 மிசில் லோட் மணல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முக்கிய மணல் ஏற்றும் வியாபாரி ஒருவரை ஒட்டுசுட்டான் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் 28.03.2024 அன்று இடம்பெற்றுள்ளது குறித்த நபர் மன்னாகண்டல் பகுதி பேராற்று போன்ற பகுதிகளில் இருந்து ஒரு இடத்தில் மணலினை சேகரித்து அதனை டிப்பரில் ஏற்ற முற்பட்ட வேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றும் ஒருவர் தப்பி ஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
22 மிசின் லோட் மணல்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஏற்ற முற்பட்ட டிப்பர் மற்றும் மன்னா கண்டல் பகுதியினை சேர்ந்த முக்கிய மணல் வியாபாரி ஒருவரையும் கைதுசெய்துள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட நபரை பொலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளபோதும் சான்று பொருட்களையும் குறித்த நபர் அனுமதிப்பத்திரம் அற்ற நிலையில் மணல் ஏற்ற முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள இந்த வழக்கினை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம்,சுற்றுச்சூழல் மற்றும் கனியவளத்திணைக்களத்தினால் பேராறு வசந்தபுரம் பகுதிகளில் வழங்கப்பட்ட மணல் அகழ்வு தொடர்பில் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு அங்கு வழங்கப்பட்ட அனுமதிகள் இரத்து செய்யப்பட்ட நிலையில் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Admin Avatar