முல்லைத்தீவில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் (CSD)முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான தமிழர் இளைஞர் பெண்கள் பணியாற்றி வருகின்றார்கள்.
இவர்களில் பொரும்பாலானவர்கள் இராணுவ பயிற்சி பெற்று பணியாற்றிவருகின்றார்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உடையார்கட்டு வடக்கில் வசிக்கும் கந்தசாமி ஜேக்கப் (மயூரன்) சிவில் பாதுகாப்பு முல்லைத்தீவு மாவட்ட தலைமையத்தின் கீழ் பணியாற்றியுள்ளார் 31 அகவையுடைய குடும்பஸ்தரான இவர் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் இணைந்து விசுவமடு சிவில் பாதுகாப்பு பயிற்சி தளத்தில் அடிப்படை பயிற்சினை பெற்றுக்கொண்ட இவர் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் விவசாய அபிவிருத்தியினை உயர்த்தும் எண்ணக்கருவிற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சுதந்திரபுரம் திட்டத்தில் பணியாற்றியுள்ளார்.
உடல் சுகயீனம் உற்ற நிலையில் இவர் கடந்த 18.03.2024 அன்று உயிரிழந்துள்ளார்
இவரின் இறுதிக்கிரியைகள் 20.03.2024 அன்று விசுவமடு பகுதியில் உள்ள சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பூரண மரியாதையுடன் நடைபெற்றுள்ளது.
இதில் துப்பாக்கிவேட்டுக்கள் தீர்க்கப்பட்டு சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்களின் இறுதி அஞ்சலியுடன் அன்னாரின் உடலம் வெள்ளப்பள்ளம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.