பொலீசார் சுட்டு பிடித்த டிப்பர் சாரதி 19 திகதி வரை விளக்கமறியலில்!
14-03-24 அன்று முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாகவே ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை நேற்றைய தினம் (14.03.2024) மாலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது மாங்குளம் வீதி உடாக ஒட்டிசுட்டான் நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை மறித்தபோது அது நிக்காமல் பயணித்துள்ளது புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை கற்சிலைமடு பகுதியில் வைத்து. துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் சில்லுக்கு சுட்டு பிடித்துள்ளார்கள்
பிடிக்கப்பட்ட டிப்பரில் எதுவித போதைப்பொருட்களும் மீட்கப்படவில்லை கிளிநொச்சி தர்மபரம் பகுதியினை சேர்ந்த 21 அகவையுடைய சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது இவர் பரந்தன்-பூநகரி- முழங்காவில் -மாங்குளம் -ஒட்டிசுட்டான் வீதிகளில் வாகனத்தை செலுத்தியமை தெரியவந்துள்ளது
ஒட்டுசுட்டான் -புதுக்குடியிருப்பு வீதியில் மறித்தபோது நிக்காமல் சென்ற நிலையில் 7வரையான துப்பாக்கி சன்னங்கள் தீர்க்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளது
பொலீசார் மறித்து நிக்காமல் சென்ற குற்றச்சாட்டு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதநிலை வரி காப்புறுதி இல்லாத உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இன்று 15-03-24 முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது குறித்த நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.