Monday, April 28, 2025
HomeUncategorizedஉழவியந்திர விபத்தில் 5 மாணவர்கள் காயம்!

உழவியந்திர விபத்தில் 5 மாணவர்கள் காயம்!

உழவு இயந்திரம் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 5பேர்  படுகாயம்!

14-03-24 இன்று முல்லைத்தீவு முள்ளியவளைப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் இல்லா விளையாட்டுப் போட்டி ஒன்றின் தயார்படுத்தலில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் உழவியந்திரத்தில் சென்ற வேளை உழவியந்திரம் தடம் புரண்டதில் ஐவர்படுகாயம் அடைந்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

முள்ளியவளை  பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் இல்ல விளையாட்டுப் போட்டி ஒன்று நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான பொருட்களை ஏற்றுவதற்காக பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் உழவியந்திரத்தில் சென்ற வேளை உழவிந்திரம் பெட்டி தடம் புரண்டுள்ளது

இந்த சம்பவம் முள்ளியவளை ஆலடி சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது பெட்டி தடம் புரண்டதில் அதில் பயணித்த மாணவர்கள் மூவர் படுகாயம் அடைந்துள்ளார்கள் ஐவர் மாணவர்களும் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்  காயமடைந்த மாணர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு உள்ளதுடன் உழவு இயந்திரத்தினை பொலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள் அதன் சாரதி  விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றார்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments