Sunday, April 27, 2025
HomeUncategorizedபழைய கண்டிவீதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

பழைய கண்டிவீதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி!

முல்லைதீவு அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் பகல் வேளை வீதியால் சென்று கொண்டிருந்த நபரை யானை தாக்கி பற்றி உள்ளது.

கரிப்பட்டமுறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி 62 அகவையுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு.S.H.மஹ்ரூஸ் சம்பவ இடத்திற்கு வருகைதந்து உடலத்தை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்று பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.

கரிப்பட்டமுறிப்பு அம்பகாமம் ஒலுமடு உள்ளிட்ட பகுதிகளில் பகல் வேளைகளில் யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள் இதனால் விவசாயிகள் வீதிகளில் செல்ல முடியாத நிலை பாடசாலை மாணவர்கள் வீதிகளில் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பாக யானையின் தாக்கத்தால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments