Monday, April 28, 2025
HomeUncategorizedமண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வு!

மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வு!

உதயசூரியன் விளையாட்டு கழகத்தினால் வருடாவருடம் நடாத்தப்படும் மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வானது இன்று உதயசூரியன் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று (09.03.2024) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விருந்தினர்கள் வரவேற்று அழைத்துவப்பட்டதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் அறிமுகம் இடப்பெற்றதுடன், குழுப்படம் எடுக்கப்பட்டதை தொடர்ந்து முதலாவது போட்டி ஆரம்பமானது. குறித்த போட்டியில் அளம்பில் இளந்தென்றல் அணியும் , ஆனந்தபுரம் அண்ணா அணியும் மோதின. ஆட்ட நேர முடிவின் போது 1:0 என்ற கோல் அடிப்படையில் ஆனந்தபுரம் அண்ணா அணி வெற்றி பெற்றிருந்தது. போட்டிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று இறுதி போட்டி இடம்பெற இருக்கின்றது.

உதயசூரியன் விளையாட்டு கழகத்தின் தலைவர் தங்கவேல் தனேஷ்குமார் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் தி.ஜெயபாவு, செம்மலை மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவசிறி கி.கிரிசாந், அளம்பில் புனித அந்தோனியார் ஆலய முன்னாள் பங்குத்தந்தை ஜூட் அமலதாஸ் அடிகளார், வி.நவநீதன் (ஐ.நா அதிகாரி) ,ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர் தி.அருணாசலம், ஓய்வு பெற்ற பிரதிகல்வி பணிப்பாளர் சி.ராஜா, சட்டத்தரணி திருமதி மதுரா சிந்துஜன், அரசியல் பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன், விளையாட்டு கழகத்தின் பயிற்றுவிப்பாளர் மு.நகுலேஸ்வரன், கிராம சேவையாளர்கள்,

உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகிகள் , கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments