முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் உள்ள முறிப்பு குளத்தில் சட்டவிரோத வேலைகளை பயன்படுத்தி நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் இருவரை அவர்களின் செயற்பாடு தொடர்பாக தண்டிக்க முற்பட்ட நெக்டா நிறுவன ஊழியர் மீது அடியாட்கள் கொண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது
இந்தச் சம்பவம் இன்று (29)காலை இடம் பெற்றுள்ளது.
இலங்கை கடத்தொழில் அமைச்சின் கீழ் நன்னீர் மீன்பிடியாளர்கள் மற்றும் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கில் நெக்டா நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் முள்ளியவளை முறிப்பு குளத்தில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி நன்னீர் மீன்பிடி நடவடிக்கையில் இரண்டு மீனவர்கள் இன்று ஈடுபட்டுள்ளதை அவதானித்த நெக்டா நிறுவனத்தின் ஊழியர் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்ட வேளை இரு மீனவர்களும் அடியாட்களை வைத்து குறித்த நெக்டா நிறுவன ஊழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்
இதன்போது காயம் அடைந்த நெக்டா நிறுவன ஊழியர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.