கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா 23.02.2024 இன்று தொடங்கி 24.02.2024 திகதி வரை நடைபெறவுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நாளை சனிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெறும் இன்று கொடியேற்றத்திற்கு இதுவரை தமிழக பக்த்தர்கள் எவரும் வருகை தராத நிலையில் இலங்கையில் இருந்து சுமார் 3500 வரையான பக்த்தர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
இலங்கை இந்திய பக்த்தர்களின் ஒன்றிணைந்த இந்த திருவிழாவினை தமிழக மீனவர்கள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்கள். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைதுசெய்யப்படுவதை கண்டித்து அவர்கள் இந்த முடிவினை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளதாகவும் முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக 3265 மீனவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கொடியேற்றத்திற்கு தமிழகத்தில் இருந்து எவரும் வருகை தராத நிலை காணப்படுவதாகவும்மன்னார் மாவட்டத்தில் இருந்து 40 படகுகள் கச்சதீவு நோக்கி புறப்பட்டுள்ளன 400 வரையான பக்த்தர்கள் இதில் பயணித்துள்ளார்கள்.
இதனை விட வடக்கில்யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்கள் உள்ளடங்கி நாட்டில் பல்வேறு பட்ட இடங்களில் இருந்து பக்த்தர்கள் கச்சதீவு நோக்கி பயணித்துள்ளார்கள்.
இன்றைய கொடியேற்றத்திற்காக சென்ற ஊடக வியலாளர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டு சிறப்பான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடக வியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்
இராணுவத்தளபதிகள்,கடற்படை தளபதிகள் மற்றும் யாழ்மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டுள்ளார்கள்.