புதுக்குடியிருப்பு-வசந்தபுரம் பேராற்றில் மணல் அகழ்வதற்கு தடை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வசந்தபுரம் பேராற்றினை அண்டிய பகுதியில் இடம்பெற்றுவரும் மணல் அகழ்வினை உடனடியாக ரத்து செய்யகோரி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் அவர்களினால் கடந்த 29.01.2024 அன்று மாவட்ட அரசாங்க அதிபருக்கும் திணைக்கள பிரதிநிதிகளுக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடையம் கடந்த 16.02.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பகுதியினை 20.02.2024 அன்று திணைக்கள அதிகாரிகள் களவிஜயம் செய்து பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்து அதற்கான முடிவினை எடுக்கவேண்டும் என முடிவெடுக்கப்பட்டமைக்கு அமையகடந்த 20.02.2024 அன்று கனியவளத்திணைக்களத்தினர்,பிரதேச செயலக அதிகாரிகள்,பொலீசார்,நீர்பாசன திணைக்களத்தினர்,கமநலசேவை திணைக்களத்தினர்,கிராம அலுவலகர்,சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மணல் அகழ்விற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களுக்கான கள ஆய்வினை  வசந்தபுரம் கிராமத்தில் உள்ள பேராற்று பகுதிக்கு சென்று மேற்கொண்டுள்ளார்கள்.

கள ஆய்வினை தொடர்ந்து மாவட்ட மாவட்ட செயலத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது இதில் மணல் அகழ்வு செயற்பாடு மற்றும் அதனால் ஆற்றில் ஏற்படும் பாதிப்புக்கள்தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது 

ஆறு ஆழமாக காணப்பட்டுள்ளமையினை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த ஆற்றில் மணல் இல்லாத  நிலை காணப்படுகின்றது ஆற்றில் போதியளவு மணல் நிரம்பும் வரை வசந்தபுரம் பேராற்று பகுதியில் மணல் அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது பின்னர் ஆவணி மாதத்தில் மீண்டும் ஒரு கள விஜயத்தினை மேற்கொண்டு மணல் அகழ்விற்கான அனுமதி வழங்குவதா இல்லை என்பது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் வசந்தபுரம் பேராற்று பகுதியில் நான்கு பேருக்கு மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Admin Avatar