முதியோர்களுக்கான தேசிய செயலக நிதி அனுசரணையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரண்டு முதியோர் இல்லங்கள் 7 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் முதியோர் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முதியோர்களுக்கான தேசிய செயலக நிதி அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலகத்தின் கண்காணிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் புதுக்குடியிருப்பு மேற்கு கிராமத்தில் 35 இலட்சம் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட முதியோருக்கான கட்டம் திறந்துவைக்கப்பட்டு முதியோர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கு மேற்பட்ட முதியவர்கள் வாழ்ந்துவரும் புதுக்குடியிருப்பு மேற்கு கிராமத்தின் முதியவர்களின் தேவைக்காக முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் 3.5 மில்லியன் ஒதுக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச சமூகசேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கண்காணிப்பின் கீழ் அமைக்கப்பட்ட இந்த முதியோர் இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் இரண்டு முதியோர் இல்லங்கள் கட்டுவதற்கான நீதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் முதலாவது முதியோர் இல்லம் கடந்த மாதம் உடையார் கட்டு வடக்கு கிராமத்திலும், இரண்டாவது முதியோர் இல்லமாக புதுக்குடியிருப்பு மேற்கு கிராமத்திலும் தலா 3.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
2024.02.19 அன்று புதுக்குடியிருப்பு மேற்கு முதியோர் சங்க தலைவர் வெ. கணேஷ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி. ஜெயக்காந்த், உதவி பிரதேச செயலாளர் செல்வி. ம. சர்மிலி, பிஞ்ரதேச செயலக கணக்காளர் .கடம்பசோதி மற்றும் சமுக சேவை உத்தியோகத்தர் கிராம அலுவலர்கள் ஆகியோரின் முன்னிலையில் பிரதேச செயலாளரால் திறந்துவைக்கப்பட்டு முதியோர் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.