முல்லைத்தீவு மாவட் டத்தில் இராணுவத்தினர் பல காணிகளில் முகாம் களை அமைத்துத்தங்கியிருந்தனர். அவ்வாறுஅமைக்கப்பட்டிருந்த பல இராணுவ முகாம் கள் தற்போது அகற்றப் பட்டு இராணுவத்தினர் அங்கிருந்துவெளியேறியுள்ளனர்.
அவ்வாறு இராணுவத்தினர் வெளியேறிச் செல்லும்போது, தாம் முகாம் அமைத்திருந்த காணிகளை வனவளத் திணைக்களத்திடம் கைய ளித்துவிட்டு வெளியே சென்றுள்ளனர்.
அவ்வாறு வனவளத்தி ணைக்களத்திடம் இராணுவத் தினர் கையளித்த காணிகள், அபிவிருத்திவேலைகளுக் காகவோ அல்லது, ஏனைய -முக்கிய தேவைகளுக்காகவோ தேவைப்பட்டால், தேவைகளைச்சுட்டிக்காட்டி வனவளத் திணைக்களத்திடமிருந்து காணிகளைப் பெற்றுக்கொள்ளமுடியுமென முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாம கேஸ்வரன் தகவல் தெரிவித் துள்ளார்.
கடந்த பெப்ரவரி வெள்ளிக்கிழமையன்று (16-02-24) இடம். பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இந்த தகவலைத் தெரிவித்திருந்தார்.
தாமும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கி ணைப்புக்குழுத் தலைவரும் பங்கேற்றிருந்த விசேட கூட்ட மொன்றிலேயே மேற்குறிப்பி டப்பட்டவிடயம்தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
எனினும் ராணுவத்தினர் பல அரச காணிகளிலிருந்து வெளியேறி இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது இன்னும் பல தனியார் காணிகளில் ராணுவத்தினரின் முகங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது அதேபோல ராணுவத்தினர் வெளியேறி உள்ள காணி விவரங்கள் தொடர்பில் மாவட்ட செயலகத்தாலோ வனவளத்திணைக்களத்தாலோ எந்த ஒரு புள்ளி விவரங்களும் வெளியிடப்படவில்லை