தேராவில் குளப்பிரச்சினை தீர்க்க முன்வந்த லைக்கா ஞானம் பவுண்டேசன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தேராவில் குளம் நிரம்பி காணப்படுவதால் குளத்தினை அண்மித்த பகுதியில் உள்ள மக்களின் வீடுகள் சுமார் மூன்று மாதங்களான குளத்து நீரில் நிரம்பி காணப்படுகின்றது இந்த நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டு தற்போது அதற்கான நிதி உதவியினை வழங்கி பாலத்தினை அமைத்து நீரினை வெளியேற்றும் நடவடிக்கைக்கு லைக்கா ஞானம் பவுண்டேசன் முன்வந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக லைக்கா ஞானம் பவுண்டேசன் நிறுவனத்தின் உப தலைவர் முன்னாள் அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் உள்ளிட்ட லைக்கா ஞானம் பவுண்டேசன் குழுவினர் வந்து பார்வையிட்டுள்ளார்கள்.

குளத்தின் நீரினை வெளியேற்றுவதற்காக 18 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது இதில் 5.5 மில்லியன் வரையிலான பாலத்தினை வீதி அபிவிருத்தி திணைக்களம் மேற்கொள்ளவுள்ளதுடன் ஏனைய நடவடிக்கையினை லைக்கா ஞானம் பவுண்டேசன் முன்னெடுக்கவுள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்காக குறித்த பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு வனவளத்திணைக்களத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது,மற்றும் கமக்கார அமைப்பினர்,கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மக்களின் பங்களிப்புடன் பாலம் அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது

Admin Avatar