Saturday, May 10, 2025
HomeUncategorizedமனைவியினை கொலைசெய்த கணவன் விளக்கமறியலில்!

மனைவியினை கொலைசெய்த கணவன் விளக்கமறியலில்!

மனைவியினை கொலைசெய்த கணவன் விளக்கமறியலில்!

முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் வாடகைவீட்டில் தங்கியிருந்த இளம் குடும்ப பெண்ணான 22அகவையுடைய ஞானசீலன் கீதாஞ்சலியினை கணவனான 23 அகவையுடைய குற்றவாளி கொலைசெய்து மலசலகூட குழிக்கு அருகில் புதைத்துள்ள நிலையில் நேற்று 24.10.23 அன்று உடலம் மீட்கப்பட்டுள்ளது.

மகளை காணவில்லை என தயாரால் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் மேற்கொண்டுள்ள நிலையில் 22 அகவையுடைய இளம் குடும்ப பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தினை செய்த கணவன் கொழும்பு பகுதியில் வைத்து நேற்று 24.10.23 அன்ற முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து புதைக்கப்பட்ட குடும்ப பெண்ணின் உடலம் மீட்ககப்பட்டு முல்லதை;தீவு மாவட்ட மருத்துவ மனை கொண்டுசெல்லப்பட்டுள்ளது பிரோத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் பெண்ணின் களுத்தில் அடிவிழுந்த காரணத்தினால் பெண் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குற்றவாளியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த இளம் குடும்பத்தில் குடும்ப பிரச்சினை அவ்வப்போது இடம்பெற்று வந்துள்ள நிலையில் இருவரும் தாக்கியுள்ளார்கள் இதன்போது கணவன் மனைவியின் கழுத்தில் தாக்கியதில் மனைவி நிலத்தில் விழுந்துள்ளார் இதனை தொடர்ந்து மனைவி உயிரிழந்துள்ளார் அதன் பின்னர் உடலத்தினை யாருக்கும் தெரியாமல் மலசலகூடத்திற்கு அருகில் உள்ள குழியில் போட்டு மூடிவிட்டுள்ளதாக கொலைக்குற்றவாளியின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உடலம் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்.

கைதுசெய்யப்பட்ட கணவன் இன்று 25.10.23 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை எதிர்வரும் 08.11.2023 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

முள்ளியவளை பொலீசாரின் உடன் நடவடிக்கைக்கு பிரதேசத்தில் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments