தெங்கு சார் உற்பத்தியினை ஊக்குவிக்கும் நோக்கில் சிரட்டைக் கரி தயாரித்தல் சூளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.
முலத்தீவு மாவட்டத்திலிருந்து தெங்கு சார் கைத்தொழிலுக்கான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் முல்லைத்தீவு விசுவமாடு பகுதியில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சிரட்டை கரி தயாரிக்கும் சூளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று18-10-23 நடைபெற்று உள்ளது
விசுவமாடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சி.சோமபால தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் செயல்திட்ட மேம்பாட்டு பிரிவு பணிப்பாளர் விலாஜ ரமயதாச, செயற்திட்ட அதிகாரி சந்திரிகா கருணாரத்தின, வடமாகாண நிகழ்ச்சித் திட்ட அதிகாரி T.A.அஹமட், புதுக்குடியிருப்பு பிரதேச உதவி பிரதேச செயலாளர் M.சர்மிலி, தென்னை பயிற்செய்கை சபையின் வடமாகாண முகாமையாளர் T.வைகுந்தன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் அமைக்கப்பட இருக்கின்ற சிரட்டை கடி சூளைக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது இதன்போது வடமாகாண தங்கு அதிகார சபையின் கீழ் இயங்கும் சிறு கைத்தொழில் செய்யும் கப்புருக்க சங்கங்களான கிளிநொச்சி இராமநாதபுரம் சங்கம் கொடிகாமம் தவசி குளம் சங்கம் ஆகியவற்றுக்கு அவர்களின் கைத்தொழிலான விளக்குமாறு தயாரித்தல் தும்புத்தடி தயாரித்தல் போன்றவற்றை மேலும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் அதற்கான இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு இயந்திரங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன
நடைபெற்ற நிகழ்வில் விசுவமடு சிவில் பாதுகாப்பு தினணைக்கள முன்பள்ளி ஆசிரியர்களின் மற்றும் உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகள் நடன நிகழ்வுகள் மற்றும் சிறப்புற கராத்தே வீரர்களுக்கான பரிசீல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.