முல்லைத்தீவில் மின்சார வேலியில் சிக்கிய காட்டுயானை உயிரிழப்பு!


முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கனகரத்தினபுரம் பகுதியில் விவசாயிஒருவரால் பாதுகாப்புக்காகபொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கிய காட்டுயானை ஒன்று 23.09.23 அன்று உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கிராமத்தினரால் வனஜீவராசிகள் திணைக்களம்,மற்றும் பொலீசார்,கிராம சேவையாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து காட்டுயானை உயிரிழந்தமைக்கான காரணத்தினை வனஜீவராசிகள் திணைக்களத்தின் மருத்துவர்குழுவினர் 24.09.23 அன்று சென்று பார்வையிட்டு மின்சாரம் தாக்கியே யானை உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்தை தொடர்ந்து யானையின் உடலம் புதைக்கப்பட்டுள்ளது.

யானை உயிரிழப்பு தொடர்பிலான விசாரணையினை முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டுவருகின்றார்கள்

முத்தையன் கட்டு மூன்றாம் கண்டம்,கனகரத்தினபுரம்,மன்னாகண்டல் பகுதிகளில் தற்போது காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளதுடன் தற்போது பனம்பழம் சீசன் காணப்படுவதால் பனம்பழத்திற்கான காட்டில் உள்ளயானைகள் ஊர்மனைகளுக்குள் வருகின்றன இதனால் விவசாயிகளின் பயன்தரு மரஙகளையும் அழித்துவருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *