சிலாவத்தை டிஸ்கோ ஐயர் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!


முல்லைத்தீவு கள்ளப்பாட்டினை சேர்ந்த இளைஞன் ஒருவர் பல்வேறு கொலை,கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபராக முல்லைத்தீவு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

முல்லைத்தீவு கள்ளப்பாட்டினை சேர்ந்தகுறித்த இளைஞன் ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் இருந்த வேளை குற்றவாளிகளுடன் நட்புகொண்டு கிளிநொச்சியினை சேர்ந்த குற்றவாளி ஒருவருடன் நெருக்கம்கொண்டுள்ளார்.

சிறையில் இருந்து வெளியில் வந்த நிலையில் மூவர் கொண்ட குழுவாக இவர்கள் செயற்பட்டு பல்வேறு இடங்களில் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.
முல்லைத்தீவில் பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ள நிலையில் கள்ளப்பாட்டினை சேர்ந்த குறித்த இளைஞனை சந்தேகத்pல் கைதுசெய்த பொலீசார் அவனிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த இளைஞன் உள்ளிட்ட கிளிநொச்சியினை சேர்ந்த இளைஞன் சேர்ந்து மூவர் கொண்ட குழுவாக கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கிளிநொச்சியினை சேர்ந்த இளைஞன் மற்றும் ஒரு குற்றத்திற்காக கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட நிலையில் கள்ளப்பாட்டு இளைஞன் தலைமையிலான குழுவினரே கடந்த 28.04.23 அன்று சிலாவத்தை பகுதியில் டிஸ்கோ ஜயர் எனப்படும் கிரியைகள் செய்யும் ஜயரினை கொலைசெய்து நகைகள் கொள்ளையிட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபரை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான். அடுத்த வழக்கிற்கு இவரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த மன்று பணித்துள்ளது.

மற்றைய நபரை தேடும் பணியில் பொலீசார் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத் து வருகின்றார்கள்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *