பெண்கள் சுய உதவி குழுக்களுக்கான நிதி உதவி- வி.பி.பவுண்டேசன்!


புதுக்குடியிருப்பில் பெண்கள்சுய உதவி குழுக்களுக்கான நிதி உதவியினை வழங்கிவைத்த வி.பி.பவுண்டேசன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இங்கி வரும் வி.பி.பவுண்டேசன் அமைப்பால் கிராமங்களில் பெண்கள் குழுக்கள் உருவாக்கப்பபட்டு பெண்கள் மற்றும் வறிய மக்களின் வாழ்வாதாரத்திற்கான உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் மூன்றாம் கட்டமாக 22.08.23 அன்று பத்து இலட்சம் ரூபா நிதி வழங்கும் நிகழ்வு புதுக்குடியிப்பு கைவேலி பெண்கள் தொழில் முயற்சியாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் ஒருங்கிணைப்பாளர் வே.கரிகாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்,புதுக்குடியிருப்பு இலங்கை முகாமையாளர் திலீபன் வி.பி.பவுண்டேசன் அமைப்பின் நிறுவுனர் தெய்வேந்திரம் இந்திரதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

கிராம மட்டத்தில் செயற்பட்டுவரும் பெண்கள் சுய முயற்சி குழுவான 17 குழுக்களுக்கு சுமார் பத்து இலட்சத்தி ஜம்பதாயிரம் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வி.பி.பவுண்டேசன் அமைப்பின் குழுங்களின் இணைப்பாளர்கள் குழுக்களை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *