விபத்தில் உயிரிழந்த முள்ளியவளையினை சேர்ந்த எம்பெருமான் குமரவேள்!


15.07.23 இன்று கிளிநொச்சி பளைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முள்ளியவளையினை பிறப்பிடமாகவும் வித்தியானந்தா கல்லூரியின் பழைய மாணவனும் தற்போது கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வருபவருமான மூன்று பிள்ளைகளின் தந்தையான எம்பெருமான் குமரவேள் உயிரழந்துள்ளார்.

இவரின் இறுதி நிகழ்வுகள் 16.07.23 நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் கிளிநொச்சி திருநகர் தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று உடலம் திருநகர் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இன்று காலை உந்துருளியில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை இந்தவிபத்து இடம்பெற்றுள்ளது மோட்டார் சைக்கில் மீது ஹயஸ் வாகனம் மோதிக்கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

வுpசாரணைகளை மேற்கொண்ட பளை பொலீசார் ஹயஸ் வாகனத்தின் சாரதியினை கைதுசெய்துள்ளதுடன் உடலம் பளை மருத்துவமனை அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *