Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

52 மனித எச்சங்களுடன் மூடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி!

52 மனித எச்சங்களுடன் மூடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி கடந்த  ஆண்டு 2023 யூன் மாதம் 29 ஆம் திகதி  இனம்காணப்பட்ட நிலையில் மூன்று கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுபோது இதுவரை 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் 16.07.2024 இன்றுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களின் போது 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு கடந்த 04.07.2024 அன்று ஆரம்பமாகி 15.07.2024 வரை 12 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மனிதபுதைகுழி இன்றுடன் தற்காலிகமாக மூடப்பட்டு அகழ்வு பணிகள் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன் தலைமையில் கண்காணிக்கப்பட்டு அகழ்வு பணிகள் நிறைவிற்கு கொண்டுரப்பட்டுள்ளன.

இறுதி நாளான இன்று சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவா,பேராசிரியர் றாஜ்சோமதேவா,காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி நிறஞ்சன்,பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்,முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கொக்கிளாய் பொலீஸ் நிலையபொறுப்பதிகாரி கொக்கிளாய் பகுதி கிராம அலுவலகர் ஆகியோர் முன்னிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் நீதிபதி முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

52 மனித எச்சங்களுடன் சான்று ஆதாரப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன தொல்பொருள் பேராசிரியர் றாஜ்சோமதேவ மற்றும் ஸ்கான் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் இந்த மனிதப்புதைகுழி மேலும் நீடிப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்ற நிலையில் நீதி மன்ற அனுமதியுடன் பகுதிளயவில் மீடப்பட்டுள்ளன.

இன்னும் ஒருசில தினங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பணியகத்தினை சேர்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு முற்றுமுழுதாக இந்த மனித புதைகுழிகளை மூடுவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்தியஅதிகாரி க.வசுதேவா தெரிவித்துள்ளார்.

குறித்த மனிதபுதைகுழி மூடும் போது நிலத்தில் குற்றவியல் பிரதேசம் என்ற எச்சரிக்கை துண்டு வழக்கு எண் ஏ.ஆர் 804/ 2024 என்றும் குற்றவியல் நீதிமன்றம்  முல்லைத்தீவு 2023-2024க்கு இடையில் தோண்டப்பட்டது என்றும் எழுதப்பட்ட மண்ணுள் பிரிகையடையமுடியாத இறபர் போட்களும் போடப்பட்டு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *