Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

வெத்திலைக்கேணி கடற்படையினருக்கு பாராட்டு தெரிவித்த முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்!

வெத்திலைக்கேணி கடற்படையினருக்கு பாராட்டு தெரிவித்த முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்!

கடந்த 28.05.2023 தொடக்கம் 17.04.2024 வரையில் வெத்திலைக்கேணி கடற்படை முகாம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 225 வெளி இணைப்பு இயந்திரங்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்  34 சுருக்குவலை தொழில் படகுகளும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெத்திலைக்கேணி கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று 17.04.2024 முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் நடைபெற்ற கடற்தொழில் அமைச்சருக்கும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களுக்கு இடையிலான சந்திப்பில் வெத்திலைக்கேணி பகுதியினை சேர்ந்த  கடற்படை முகாம் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளார்கள்.

அம்பன் தொடக்கம் சாலைவரையிலான 54 கிலோமீற்றர் தூர கடற்பரப்பில் இடம்பெற்று வரும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகள் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

நாகர்கோவில்,சுண்டிக்குளம்,சாலை போன்ற பகுதிகள்தான் வெத்திலைக்கேணி கடற்படையினரின் பகுதியாக காணப்படுகின்றது. இந்த பகுதியில் குழைகட்டி கணவாய் பிடித்தவர்கள் 10 படகுகள் கைதுசெய்யப்பட்டுள்ளன. 

இவ்வாறு வெத்திலைக்கேணி கடற்படையின் எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளில் இடம்பெற்று வரும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகள் ஒரளவு குறைக்கப்பட்டுள்ளதாக குறித்த கடற்படை அதிகாரி தெரிவித்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் கைதட்டி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்கள்.

கடற்படையின் உயர் அதிகாரிகள் மற்றும் யாழ்மாவட்ட கடற்தொழில் தநீரியல்வளத்திணைக்களத்தின் ஒத்துளைப்புடனும் தான் இவ்வாறான சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்தி வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்

இதேவேளை சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்துவது தொடர்பில் இந்த ஆண்டு இதுவரை ஒரு படகுகூட முல்லைத்தீவில் கைதுசெய்யவில்லை என  கடற்படையிரின் நடவடிக்கை தொடர்பில் கடற்தொழில் அமைச்சரிடம் முறையிட்டுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *