முல்லைத்தீவில் அதிகரித்து செல்லும் மழைவீழ்ச்சி!

டிசம்பரில் பெய்த அதிகளவான மழைவீழ்ச்சியால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 20 பெரிய நடுத்தரகுளங்களும் 390 சிறிய குளங்களும் நிரம்பியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்பாசன பணிப்பாளர் சு.விகிர்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1998 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியின் அளவு அதிகரித்துக்கொண்டு செல்வதாக நீர்பான திணைக்கள புள்ளிவிபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி மாவட்டத்தில்  நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான பெரிய,நடுத்தரகுளங்களான 20 குளங்கள் (வவுனிக்ளம்,முத்தையன்கட்டுளம்,தண்ணிமுறிப்பு குளங்கள் உள்ளிட்ட) நிரம்பி வான்பாய்ந்துள்ளதுடன் குளங்களின் சில வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.

இதனை விட மாவட்டத்தில் உள்ள 390 சிறிய குளங்கள் நிரம்பி வழிந்துள்ளன.

இதற்கான காரணம் காலநிலை மாறிக்கொண்டு செல்கின்றது என்பதை காணக்கூடியதாக உள்ளது வவுனிக்குளம் கடந்த மூன்று ஆண்டுகள் வான்பாயாத நிலையில் இந்த முறையே வான் பாய்கின்றது.
இந்த ஆண்டு டிசம்பர் 17 வரையில் மாதந்தம் சராசரியாக  1387.39 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது.

நீர்பாசன திணைக்களத்தின் பதிவின் படி 1998 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டுவரை ஆண்டுக்கு சராசரியாக 1383 மில்லிமீற்றர் மழை கிடைத்துள்ளது.

ஆனால் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 17 வரை மாத்திரம்  2255 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது.

இலங்கையின் ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியே 1500 மில்லிமீற்றர் மழைவீழ்சிக்குட்பட்டதாகவே காணப்படுகின்றது.
இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்னும் மழை இருப்பதாக சொல்லப்படுகின்றது எதிர்வரும் 26 ஆம் திகதி ஒரு தாழமுக்கம் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

வவுனிக்குளத்திற்கு கீழ் சராசரி மழைவீழ்ச்சியை விட இருமடங்கு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

முத்தையன் கட்டுகுளத்திலும் இவ்வாறுதான் தண்ணிமுறிப்பு குளத்திலும் இவ்வாறுதான் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

வவுனிக்குளத்திற்கும்,தண்ணிமுறிப்பு குளத்திற்கும் மேல் உள்ள சிறுகுளங்கள் சடுதியாக பெருக்கெடுத்து பாய தொடங்கியதால் சடுதியாக நீர் ஏறதொடங்கியுள்ளது. இதனால் தண்ணிமுறிப்பு குளத்தின் கதவுகள் தொடச்சியாக திறந்துவிடப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறுகிய காலத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது இதனால் குளத்தினை பாதுகாக்கவேண்டிய தேவையும் உள்ளது மக்களையும் விவசாயத்தினையும் பாதுகாக்கவேண்டிய தேவையும் உள்ளது வெள்ளத்தினை தவிர்க்கமுடியாத நிலை ஒன்று உள்ளது இதனால் விவசாயிகளுக்கே அதிக பாதிப்பினை ஏற்படுத்தும்
தற்போதும் குளங்களின் நீர் நிலைகளை குறைத்துவைக்கவே விரும்புகின்றோம். என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்

Tagged in :

Admin Avatar