Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் அதிகளவான ஜஸ் இளைஞனை கைதுசெய்ய விசேட அதிரடிப்படையினர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகளவான போதைப்பொருள் பாவனை இடம்பெற்று வருகின்றமை யாவரும் அறிந்த உண்மை இந்த நிலையில் தேராவில்,விசுவமடு மாணிக்கபுரம்,வள்ளுவர்புரம் பகுதிகளில் அதிகளவில் போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வருகின்றது.
புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் ஆழணி பற்றாக்குறையால் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களையும் கண்காணிக்க முடியாதநிலை காணப்படுகின்றது.

குறிப்பாக நெத்தலியாறு தொடக்கம் மன்னாகண்டல்,வரையும் புதுக்குடியிருப்பு பிரதேச பொலீசாரின் கண்காணிப்பு புகுதியாகும்.

நரப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலேயே பொலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது கிராமங்களிலும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி வருகின்றார்கள்

இந்த நிலையில் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தேராவில் பகுதியில் ஐஸ் எனப்படும் அதிக விலைஉடைய போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவரை கiதுசெய்துள்ளார்கள்.

இவரிடம் இருந்து 21 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சாதாரணமாக 2 கிராமிற்கு அதிகமாக வைத்திருந்தல் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்பது பலரும் அறிந்த உண்மை இந்த நிலையில் 23 அகவையுடைய தேராவில் விசுவமடு பகுதியினை சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளான்.

குறித்த இளைஞனையும்,சான்று பொருட்களையும் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைத்தில் பாரப்படுத்தியுள்ளார்கள்.
இவ்வாறு அதிகளவிலான போதைப்பொருளுடன் கைதானவரை உயர் நீதிமன்றம்தான் கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக சட்ட நடவடிக்கையினையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையிலும் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *