உடையார்கட்டில் விவசாயிகளுக்கான யப்பான் அரசின் யூரியா உரம் வழங்கும் நடவடிக்கை!

யப்பான் அரசினால் உலகஉணவு விவசாய தானத்தின் மூலம் வழங்கப்பட்ட யூரியா உரத்தினை நாட்டில் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் கமநல  சேவை நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார் கட்டு பிரதேசத்தில்  2022 மற்றும் 2023 ஆண்டு காலபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளுக்கு உடையார்கட்டு கமநல சேவை திணைக்களம் ஊடாக உரம் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது.
2.5 ஏக்கருக்கு உட்பட்ட வயல் நிலங்களை கொண்ட விவசாயிகளுக்கே இது வழங்கப்பட்டு வருகின்றுது.

உடையார் கட்டு பிரதேசத்தில் உள்ள 1001 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

1.25 ஏக்கருக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு 25 கிலோ யூரியாவும் 1.25 ஏக்கர் தொடக்கம் 2.5 ஏக்கர் வரையான விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா உரமும் வழங்கப்பட்டு வருகின்றது.

இன்று வழங்கும் நடவடிக்கை விசுவமடு மேற்கு கமக்கார அமைப்பினருக்கு விசுவமடு தொட்டியடி பகுதியில் உள்ள களஞ்சியத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஏனைய விவசாயிகளுக்கு உடையார் கட்டு கமநல சேவை நிலையத்தில் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக உடையார் கட்டு கமலந அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.மயூரன் தெரிவித்துள்ளார்.

Tagged in :

Admin Avatar