அரசியல் தீர்வு வரமுடியாது பா.உ.சித்தார்த்தன் தெரிவிப்பு!

நான் இப்போதும் சொல்கின்றேன் அரசியல் தீர்வு வரமுடியாது அப்போது ஏன்நாங்கள் பேசுகின்றோம் வரமுடியாது என்பதற்காக பேசாமல் விடமுடியாது அரசாங்கம் எங்களை அழைக்கின்றது பேசவாருங்கள் என்று நாங்கள் போகமல் விட்டால் நாங்கள் தான் தவறான பக்கத்தில் நிற்போம் சர்வதேச ரீதியாக அரசிற்கு மிக இலகுவாக இருக்கும் இவர்கள் பேசவருவதில்லை நாங்கள் எப்படி பேசி தீர்ப்பது என்று?

நாங்கள் சர்வதேச ரீதியான அழுத்தங்களை கொடுப்பதற்கு வசதியாக இருக்கும் சரிவருகின்றதோ இல்லையோ என்பதை அடுத்த கட்டமாக பார்த்துக்கொள்ளவேண்டும் எங்கள் கடமையினை சரியாக செய்யவேண்டும் சிலவேளைகளில் சிலர் தேர்தல் அரசியலுக்காக தைப்பொங்கலுக்கு வரும்,தீபாவளிக்கு வரும் என்று சொல்வார்கள்.

இன்று இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடி இதுவந்து இலங்கை முழுக்ககூடிய நெருக்கடி அது சிலவேளைகளில் முன்பு ஆட்சிசெய்தவர்கள் விட்ட பிளையா இருக்கலாம் ஆனால் வேறு அடிப்படை காரணங்களும் இருக்கின்றது றஸ்ய உக்ரென் யுத்தம் இன்று உலகம் முழுக்க பொருளாதார நெருக்கடி பெரியளவில் இருந்து கொண்டிருக்கின்றது.

 முந்தய அரசு தலைவர்கள் தாங்கள் செழிப்பாக வாழ்வதற்கு இந்த நாட்டை சுறண்டி வாழ்ந்ததினால் மிக பின்னடைவினை அடைந்திருக்கின்றோம் மற்றைய நாடுகள் ஓராளவிற்கு பொருளாதார நெருக்கடியினை தாங்கிக்கொண்டுள்ளார்கள்.

தற்போது உள்நாட்டு கடன் எவ்வாறு அடைப்பது என்று பேசப்பட்டு வருகின்றது சனிக்கிழமை பிரத்தியேகமாக பாராளுமன்றம் கூட்டப்படுகின்றது இந்த நாட்டு மக்களை பாதிக்காதவகையில் செய்யப்படும் என்று தொடர்ந்து அரசாங்கம்கூறுகின்றபோது

எதிர்கட்சிகள் அல்லது பொருளாதார நிபுணர்கள் மிகத்தெளிவாக சரியான கருத்தினை கொள்ளவில்லை வங்கிகளில் மக்கள் செற்ப பணத்தினைகூட போட்டுள்ளார்கள் அவர்களின் பணம் பாதுகாப்பாக இருக்குமா என்றகேள்விகள் எல்லாம் இருக்கின்றன இந்த கேள்விகளுக்கு நாளை மறுதினம் பதில் கிடைக்கலாம் அதன் பிறகுதான் கட்சிகள் எல்லாம் சரியான முடிவினை எடுக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மகளீர் அமைப்பின் ஆண்டு ஒன்று கூடலும் கௌரவிப்பு நிகழ்வும் 29.06.23 அன்று முள்ளியவளை தண்ணீரூற்றில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றுள்ளது
கட்சியின் மகளீர் அணிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் கேதினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கட்சியின் முன்னால் மாகாணசபை உறுப்பினர்கள் முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் பெண்கள் அணியினர் மற்றும் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளதுடன் திறம்பட செயற்டும் மகளீர் அணியினருக்கான கௌரவிப்புக்களும் இதன்போது நடைபெற்றுள்ளது

Tagged in :

Admin Avatar