Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி இருவர் காயம்!

02.04.23 இன்று மாலை 2.00 மணியளவில் புதுக்குடியிருப்பு குழந்தை யேசுகோவில் பகுதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்வதுமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.00 மணியவில் இடம்பெற்றுள்ளது இரண்டு மோட்டார் சைக்கில்கள் மோதிக்கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது காயமடைந்த…

சிரேஸ்ட இடைநிலைப்பிரிவு பகுதி தலைவராக கடமை புரிந்த ஆசியருக்கு மணிவிழா!

குமுழமுனை மகாவித்தியாலய சிரேஸ்ட இடைநிலைப்பிரிவு  பகுதி தலைவராக கடமை புரிந்த ஆசியருக்கு கடந்த (31.03.2023) சேவை நலன் பாராட்டு விழாவும், மணிவிழாவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.  முல்லைத்தீவு – குமுழமுனை மகாவித்தியாலயத்தில் சிரேஸ்ட இடைநிலைப்பிரிவு  பகுதி தலைவராகவும், தமிழ் பாட ஆசிரியராகவும் கடமையாற்றிய  பாலநாதன் நகுலேஸ்வரி ஆசிரியையின் 60ஆவது ஆண்டு சேவை பூர்த்தி நிறைவு நாளில் அவரது…

உடையார் கட்டில் சிறப்புற நடைபெற்ற தந்தைசெல்வாவின் ஜனன தினம்!

தமிழ்த் தேசிய தந்தை, ஈழத்து காந்தி என உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் அன்பாக அழைக்கப்படுகின்ற S.J.V செல்வநாயகம் தந்தை செல்வா அவர்களின் 125வது ஜனன தினம் 31.03.2023 இன்றைய தினம் மாலை 4மணியளவில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு மண்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தருமான…

பாலைமரத்தடி ஸ்ரீ முத்துமாரியம்மன் சித்திரத்தேர் நேரலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் பலைமரத்தரடி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் புதிய சித்திரத்தேர்த்திருவிழா 01.04.23 சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் அப்பாளுக்கு அபிசேகம் இடம்பெற்று காலை 8.00 மணிக்கு பதிய சி;த்திரதேரிலே அம்பாள் அமர்ந்து வீதி ஊலாவர அருள்பாலித்துள்ளார். இந்த நாளில் தீச்சட்டி,பாற்செம்பு,காவடி ஆகிய நேர்த்திக்கடன்களை அடிவர்கள் செய்யவுள்ளார்கள். இந்த சித்திர தேர்திருவிழாவின் நேரலையினை கீழ் காணும்…

குப்பிவிளக்கில் வாழ்ந்த குடும்பம் 6மாத குழந்தையினை பலிகொடுத்த சோகம் விசுவமடுவில்!

குப்பிவிளக்கில் வாழ்ந்த குடும்பம் 6மாத குழந்தையினை பலிகொடுத்த சோகம் முல்லைத்தீவு விசுவமடுவில்! குப்பிவிளக்கு வீழ்ந்து தீப்பற்றியதில் காயமடைந்த 6 மாத ஆண்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் கிராமத்தில் அடிப்படைவசதிகள் அற்ற நிலையில் தற்காலிக வீட்டில் வசித்துவந்த இளம்குடும்பம் ஒன்றிற்கு இந்த துயர சம்பசம் இடம்பெற்றுள்ளது. சின்னையா சுறோமி…

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளின் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் போராட்டம் 2213 ஆவது நாளான 30.03.2023 இன்று நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்  சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்னால் முல்லைத்தீவு முதன்மை வீதியில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்கு நீதி கோரி…

புதுக்குடியிருப்பில் நடைபாதை வியாபாரத்தினார் சந்தை வணிகர்கள் பாதிப்பு மனு கையளிப்பு!

புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் நடைபாதை வியாபாரிகளின் வியாபார நடவடிக்கையினால் சந்தை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை அனைத்து வணிபங்களின் உரிமையாளர்கள் முல்லைத்தீவு உள்ளுராட்சி மன்ற ஆணையாளருக்கு மனுஒன்றினை கையளித்துள்ளார்கள். அந்த மனுவில்புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை மரக்கறி வாணிப உரிமையாளர்கள் மற்றும் புடவை வாணிப உரிமையாளர்கள் பழக்கடை வாணிப உரிமையாளர்கள் மற்றும் மீன் வாணிப உரிமையாளர்கள் ஆகிய நாம் தங்களுக்கு…

தொடர்ச்சியான தமிழினஅழிப்பினை மேற்கொண்ட அரசு இன்று மத்தினை பயன்படுத்தி அழித்துவருகின்றது!

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தமிழ்இனத்தினை அழித்து வந்த சிங்கள தேசம் இன்று மதத்தினை பயன்படுத்தி அதன் ஊடாக எமது மதஸ்தாலங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது இந்த விடையத்தினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். 28.03.23. இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பினை நடத்தி…

முல்லைத்தீவு வீதி -இராணுவமுகாம் அகற்றப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுடுட்டான் மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் நிலைகொண்டிருந்த படையிரின் முகாம் ஒன்று முற்றாக அகற்றப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்ப்டதில் இருந்து குறித்த பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் படைமுகாம் அமைத்து கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்து வந்துள்ளார்கள். இந்த பகுதியில் உள்ள அரசமரத்தின் கீழ் புத்தச்சிலை மற்றும் பிள்ளையார்…

சிவலிங்கம் வைக்கும் சிவன் அடியவர்களே –வெடுக்குநாறியில் நடப்பது தெரியுமா!

வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆங்காங்கே சிவலிங்கத்தினை வைத்து மக்களுக்கு வழிபாடுவதற்கு ஏற்றவகையில் செயற்பட்டு வரும் சிவன் அடியவர்களே தொன்மைகொண்ட பழமைபொருந்திய வெடுக்குநாறி ஆதிலீங்கேஸ்வரர் ஆலயத்திற்கு நடந்தது உங்களுக்கு தெரியுமா ஏன் இவ்வாறு புராதான தொன்மையுள்ள இடங்களை விட்டுவிட்டு வீதிகளிலும் சந்துகளிலும் சிவனை நிறுவி சிவதாண்டவம் ஆடுகின்றீர்கள். (VOICEOFMULLAI) தமிழர்கள் வாழ்ந்ததற்கான நாகர்கர் வழிபட்டதற்கான ஆதாரங்கள் வன்னில்…