Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

முல்லைத்தீவில் 500 குடும்பங்களுக்கு சீனாவின் உலர் உணவுப்பதிகள்!

இலங்கை எவ்வாறான சவால்களை சந்திக்க நேரிடுதோ அவ்வாறான நிலையில் சீன மக்களும் சீன அரசாங்கமும் இலங்கைக்கு கை கொடுக்க தயாராக உள்ளார்கள்- இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவிப்பு! பௌத்த விகாரைகள் மற்றும் சீனாவின் பௌத்த மக்களால் இலங்கையில் உள்ள ஏழை மக்களுக்கான உலர் உணவு நன்கொடை வழங்கு நிகழ்வு சீன பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று…

தேராவில்-வீட்டில் பெண்களை 🗡️ கத்தி முனையில் அச்சுறுத்தி கொள்ளை!

தேராவில் கிராமத்தில் துணிகரக் கொள்ளை 10 லட்சத்துக்கும் அதிக சொத்துக்கள் சூறையாடல்!முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தேராவில் ஏரிக்கரை பகுதியில் வீட்டில் இருந்த பெண்களை பயமுறுத்தி பணம் நகை  உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று இரவு (04-11-23) நடைபெற்று உள்ளது வீட்டில் வயோதிபத்தாய் மற்றும் பெண் அவரது மகள் ஆகியோர் இருந்த…

குரவில் கிராமத்தில் இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் மூவர் காயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குரவில் கிராமத்தில் இன்று 04.11.2023 இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூன்று சககோதரர்கள் காயமடைந்துள்ளார்கள். மாலை வேளை இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது இதன்போது மின்னல் தாக்குதல் குரவில் கிராமத்தில் பதிவாகியுள்ளது வீட்டின் மின்சார இணைப்பு ஊடாக மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது இதன்;போது வீட்டில்…

விசுவமடு பகுதியில் நூதன முறையில் பணம் அபகரிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவடு கிழக்கு பகுதியில் இன்றையதினம் இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வதா கொடுப்பனவும் 80,000 உங்களது கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதை பெறுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் தற்பொழுது தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், நீங்கள் ஒப்படைத்த பணம் மீண்டும் உங்களது கணக்கில் வைப்பிலிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்களிற்கு…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய புதிய நிர்வாகத்தெரிவு!

இலங்கை திருநாட்டின் பிரசித்தி பெற்ற உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதங்கள் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான புதிய நிர்வாக தெரிவிக்கான வாக்கெடுப்பு நாளை 04.11.2023 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கடந்த காலத்தில் நிர்வகித்து வந்த நிர்வாகிகளால் ஆலயத்தின் நிதிபரிமாற்றம் மற்றும் சொத்துக்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் பிணக்கு காணப்பட்ட நிலையில் நீதிமன்றில் வழக்காளிகளால் வழக்கு தொடரப்பட்டு…

தேசிய உயரம் பாய்தல் போட்டியில் தங்கப் பதக்கம்!

தேசிய மட்ட SIR JOHN TARBAT SCHOOL CHAMPIONSHIP 2023. கல்வி அமைச்சும் பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனமும் இணைந்து நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய தடகளப்போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கிலே நடைபெற்று வருகின்றது. 12 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் உயரம் பாய்தலில் கலந்து கொண்டு வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்தின் கொக்குத்தொடுவாய்…

கைவேலிப்பகுதியில் கடையில் கொள்யிட்ட சந்தேகத்தில் ஓருவர் கைது!

புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரவு வேளை கடைக்குள் நுளைந்த கொள்ளையர்கள் கடையினை உடைத்து கடையில் இருந்து பெறுமதியான பால்மா உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள் இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடையின் உரிமையளரின்…

சில மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு பணிக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்!

கார்த்திகை மாதம் பிறந்தால் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கடந்த காலங்களில் வடக்கில் போரில் உயிரிழந்தவர்களை நினைவிற்கொள்ளும் மாவீரர் நாள் நிகழ்வுகள் கார்த்திகை 27 அன்று மக்கள் நினைவிற்கொண்டுள்ளார்கள்.இந்த நிலையில் இம்முறையும் மக்கள் நினைவிற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் சில மாவீரர் துயிலும் இல்லங்களுக்கான பணிக்குழுக்கள் நியமிக்கப்படவேண்டும் என்பது மக்களின்…

புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான மாணவன் எடுத்தவிபரீத முடிவு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியில் போதைப்பொருளான ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 16 அகவையுடைய மாணவன் தவறான முடிவு எடுத்து உயிரினை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று 03.11.2023 இன்று பதிவாகியுள்ளது. 10ஆம் வட்டாரத்தில் வசிக்கும் 16 அகவையுடை குறித்த மாணவன் ஜஸ்போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார். இந்த நிலையில் இவரை வீட்டில் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார்கள் வீட்டில்…

வித்தியானந்தா கல்லூரிக்கு பின்பாக எறிகணைகள் மீட்பு!

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட ஐந்து செல்களை பொலிஸார் மீட்டுள்ளனர். முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு பின்பாகவுள்ள விளையாட்டு மைதானத்தினை இன்று (1) சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வெடிபொருட்கள் இருப்பது தொடர்பாக முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அப்பகுதியில் காணப்பட்ட செல்கள்…