முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள்ரீதியாக நடைபெற்று வருகின்றது அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை 275 மாவீரர் பெற்றோர்கள் உரித்துடைய குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.
முன்னதாக மங்கள வாத்திய இசையுடன் மாவீரர்களின் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.
தொடர்ந்து நிகழ்வில் பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயாரும் நாட்டுப்பற்றாளரின் துணைவியுமான நேசம்மா அவர்கள் ஏற்றிவைக்க
நிகழ்வு சுடரினை புலம்பெயர் தேசத்தில்இருந்து வந்த தமிழ் அவர்களும் தாயக செயற்பாட்டாளர் விச்சு அவர்களும், எழுகை அமைப்பின் தலைவர் றூபன் ,அன்னை அறக்கட்டளையின் கிழக்கு மாகாணத்தின் பணிப்பாளர் திரிசா முன்னாள் போராளி பிரபா,மாவீரரின் மனை சமூக செயற்பாட்டாளர் கனி ,ஊடகவியலாளர் உதயன்,சமூக செயற்பாட்டாளர் ஜீவதர்சன்,ஆகியோர் ஏற்றிவைத்தார்கள மாவீரர்களின் பொது திருவுருவப்படத்திற்கு மூத்த உறுப்பினர் காக்கா அண்ணர் அவர்கள் சுடர் ஏற்றி மலர்மாவை அணிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாவீரர்களின் நினைவு படத்திற்கு அன்னை அறக்கட்டளையின் உடைய பணிப்பாளர் நந்தன் சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து தொடர்ந்து மலர் வணக்கம் நடைபெற்றுள்ளது.
நினைவுரைகளை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் பழமரக்கன்றுகள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
அன்னை அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மண்ணையும் மக்களையும் நேசிப்போம் என்ற நோக்கில் புலம்பெயர் தேசத்தில் உள்ள இரண்டு நண்பர்களின் முழுமையான நிதிப்பங்களில் 275 மாவீரர்களின் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் கௌரப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





