முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம்
மாவீரர் துயிலும் இல்லத்தில் 2025 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக இன்று (28) சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
இன்று காலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பகுதிக்கான வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன
இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிர்வாகத்தினர் 2025 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெறுவதற்கான சிரமதான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய ஏற்பாடுகளும் இடம்பெற உள்ளதாகவும் மாவீரர்களின் பெற்றோர் உறவுகள் வருகை தந்து தொடர்ந்து இடம்பெறும் பணிகளில் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளனர்



