புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்!
09.10.2025 இன்று புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இன்றைய தினம் இரவு 7:30 மணியளவில் வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞருடன் வாகனம் ஒன்று மோதி பாரியளவு விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது
இவ் விபத்துல் பலத்த காயமடைந்த இளைஞன் புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற வாகன உரிமையாளர் மற்றும் வாகனம் பிரதேச வாசிகளால் பிடிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர்
குறித்த வாகனத்தின் சாரதியினை கைதுசெய்த புதுக்குடியிருப்பு பொலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.