Monday, October 6, 2025
HomeMULLAITIVUஉடையார்கட்டு அ.த.க பாடசாலையில் புலமை  பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு!

உடையார்கட்டு அ.த.க பாடசாலையில் புலமை  பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள உடையார் கட்டு அ.த.க.பாடசாலையில் 2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பும் பாடசாலையின் ஆண்டு பரிசளிப்பு நிகழ்வும் 06.10.2025 அன்று சிறப்புற  நடைபெற்றுள்ளது.

பாடசாலை முதல்வர் செல்வறஞ்சினி பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரமவிருந்தினராக கிளிநொச்சி நிறைவேற்றுப் பொறியியலாளர் க.நித்தியானந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு கோட்டக்கல்லிப்பணிப்பாளார்   சி.பாஸ்கரன், உடையார்கட்டு மகாவித்தியாலய அதிபர் சி.ஏகாம்பரம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக முல்லை வலய ஆசிரிய ஆலாசகர்கள் கே.நவநீலன்,கே.ரகுஉதயகுமார் கிராம சேவையாளர் க.கவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

உடையார்கட்டு அ.த.க.பாடசாலையில் இருந்து விருந்தினர்கள் மாணவர்களின் பான்ட் வாத்திய அணிஇசையுடன் அழைத்து வரப்பட்டு உடையார்கட்டு மகாவித்தியாலய கலையங்கில் நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றுள்ளன.

2025 ஆம் ஆண்டு தரம்5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 9மாணவர்கள் மற்றும்   சிறந்த பெறுபேற்றினை பெற்றமாணவர்களும் மற்றும் கோட்டமட்டம்,வலயமட்டம்,மாவட்டமட்டம்,மாகாணமட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற பாடசாலைமாணவர்களும் குறிப்பாக சரணியத்தில் சிறப்பு சாதனை படைத்த மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். 

புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உடையார்கட்டு வர்த்தக சங்கத்தினால் வங்கியில் பணம் வைப்பிலிடப்பட்ட வங்கிபுத்தகங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளை தொடர்ந்து மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டினை முன்னெடுத்து ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments