முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தின் கப் வாகனம் மோதி குடும்ப பெண் படுகாயம்!
05.10.2025 இன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த குடும் பெண் ஒருவர் மீது இராணுவத்தின் கப் வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் குடும்ப பெண் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்தில் புதுக்குடியிருப்பு இரணைப்பாலையினை சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் முல்லைத்தீவு மாவட்டமருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணையினை முல்லைத்தீவு பொலீசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.