உடலில் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் பாடசாலை மாணவன் ஒருவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட இருட்டு மடு என்ற கிராமத்தில் வசிக்கம் குறித்த இளைஞன் உடலில் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் உடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்விகற்கும் இருட்டு மடுகிராமத்தினை சேர்ந்த 15 அகவையுடைய மாணவன் பாடசாலையில் மாணவி ஒருவரை கேலிசெய்தமைக்காக மாணவியின் குடும்பத்தவர் குறித்த மாணவனை தனியா அழைத்து வீட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவமனை பொலீசார் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதுடன் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
