மக்களின் வரிப்பண அபிவிருத்தியில் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பதில்லை தேசிய மக்கள் சக்தி மீது தவிசாளர் குற்றச்சாட்டு!
மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு ஏனைய மக்கள் பிரதிநிதிகளை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அழைப்பதில்லை என புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களின் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளர்களை அழைப்பதில்லை என புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (3) விசுவமடு கிழக்கு பகுதியில் உள்ள அட்டைக்குளம் அபிவிருத்திக்கு இரண்டு மில்லியன் ரூபா பணத்திட்டத்தினை அரசாங்கம் மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஓதுக்கீடு செய்துள்ளது அதற்கான முன்னாயத்த திட்டமிடல் கலந்துரையாடல் ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தலைமையில் கிராம அலுவலகர் அலுவலகத்தில் நடைபெற்ற வேளை இந்த கருத்தினை தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இன்றைய இந்த கூட்டம் தொடர்பில் தவிசாளர் என்றவகையில் எந்த அழைப்பும் கிடைக்கவில்லை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அவர்களுக்கும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்
இந்த நாட்டில் ஊழல் இல்லாத அரசாங்கம் என்று சொல்லிக்கொண்டுவரும் அரசாங்கம் எடுக்கின்ற நல்ல திட்டங்களுக்கு நாங்கள் ஆதரவாக நிக்கின்றோம் ஏன் இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் நடக்கும் போது மக்கள் பிரதிநிதிகளை அழைப்பதில்லை தேசிய மக்கள் சக்கதியின் கட்சி சார்ந்தவர்களையே அழைத்து நிக்கின்றார்கள்.
ஒவ்வொரு பிரதேசங்களில் நடக்கின்ற அபிவிருத்திக்கு பிரதேசங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கவேண்டும் அந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கவேண்டும் இனிவரும் காலங்களிலாவது இந்த அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற கோரிக்கையினை தவிசாளர் முன்வைத்துள்ளர்
தவிசாளரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அங்க பிரசன்னமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ..
வன்னி மாவட்டத்தில் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் அதேபோல் பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் இருக்கின்றார்கள் அனைவரும் பல்வேறு பட்ட வேலைப்பழுவிற்கு மத்தியில் வேலை செய்துகொண்டிருக்கின்றார்கள் வன்னியில் கிராம மட்டங்களில் நூற்றுக்கணக்கான வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன
இந்த நிகழ்வுகள் அனைத்திலும் அனைத்து பிரதிநிதிகளும் கலந்துகொள்வதாக இருந்தால் அவர்கள் அது மட்டும்தான் செய்யலாலம் இன்றைய நிகழ்விற்கு நான் வந்தது மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் பணிப்பின் பெயரில் வந்தேன் அட்டைக்குளம் அபிவிருத்தி தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தலையே மேற்கொள்ளப்பட்டுள்ளது அரசியல் பிரச்சாரமோ அல்லது அரசியல் வியாபாரமோ இங்கு இடம்பெறவில்லை
முல்லைத்தீவு மாவட்டத்தில் து.ரவிகரன் எம்பிக்கும் எங்ளை நன்கு தெரியும் நாங்கள் அவர்களுடன் சேர்ந்துதான் இயங்குகின்றோம் அதேபோல்தான் எங்களுடன் இணைந்துதான் அவரும் இயங்கு கின்றார் இதில் எந்தவித பாராபட்சமும் இல்லை மாவட்ட அபிவிருத்திக்குழுகூட்டங்களில்,மற்றும் பாரிய வேலைத்திட்டங்கள் நடைபெறும் பொழுது அவர்களை அழைக்கின்றோம் முன்னுரிமை வழங்குகின்றோம் நானும் பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் பிரதிநிதி என்றவகையிலேயே இந்த நிகழ்வின் கலந்துகொண்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
