முல்லைத்தீவில் மீன்பிடிக்க சென்றவரை காணவில்லை! 2025.08.27 அன்று சுமார் இரவு 8:30 மணியளவில், கொக்கிளாய் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் மீன்பிடி கிராமத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற பநபர் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை. அந்த நபர் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை என்று உறவினர்களால் கொக்கிளாய் பொலீஸ் காவல் நிலையத்தில் 2025.08.28 இன்று முறையிட்டுள்ளார்கள்.
இது தொடர்பில் பொலிசார் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காணாமல் போன நபர் 23 அகவையுடைய வர்ணகுலசூரிய நெகித் ரவிஷா பெர்னாண்டோ என தெரியவந்துள்ளது
இந்த நபர் மீன்பிடிக்கச் சென்ற OFRP/A/5286/PTM என்ற எண்ணைக் கொண்ட படகு நாயாறு முகத்துவாரத்தின் முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மேலும் இதுவரை மீனவர் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை தெரியவந்துள்ளது