முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக அதிகாரிகள் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தேறாங்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளை வீடு வீடாக சென்று ஆராய்வதற்கான கள விஜயம் ஒன்றினை இன்று (26) மேற்கொண்டனர்.
துணுக்காய் பிரதேச செயலாளர் ராமதாஸ் ரமேஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் றகமா மற்றும் ஒளிரும் வாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் தேறாங்கண்டல் கிராம அலுவலரின் ஒழுங்குபடுத்தலில் துணுக்காய் உதவி பிரதேச செயலாளர் சிறீஜெயராம் நித்தியா தலைமையிலான குழுவினர் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் துணுக்காய் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் சிறீஜெயராம் நித்தியா அவர்களின் பங்குபற்றுதலுடன், தேறாங்கண்டல் கிராம சேவகர் பிரிவில் களவிஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகள் பற்றியும் தீர்க்கப்படாத குறைபாடுகள் பற்றியும் அவற்றை செயல்படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டறியப்பட்டது
இவற்றைத்தொடர்ந்து தெளிவூட்டல் மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களும் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கள விஜய செயற்பாட்டில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்
குறித்த கள விஜய செயற்றிட்டத்தில் துணுக்காய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் இணைந்து ஏனைய திணைக்களங்கள் குறிப்பாக பொலிஸ் திணைக்களம் ,பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்ககள் ,கிராம மட்ட அமைப்புக்கள் என்பன கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இக்கிராமம் கௌரவ ஆளுநரின் செயற்திட்டத்தில் மாதிரிக்கிராமமாக தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
