Wednesday, December 18, 2024
HomeMULLAITIVUமுல்லைத்தீவில் வாடி வேலைக்கு வந்தவர் கொலை ஒருவர் கைது!

முல்லைத்தீவில் வாடி வேலைக்கு வந்தவர் கொலை ஒருவர் கைது!

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்களின் வாடிக்கு வேலைக்கு வந்த கண்டி மாவட்டத்தினை சேர்ந்த ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றும் ஒருவரை கொக்கிளாய் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

கண்டி, நுவரெலியா பகுதியில் இருந்து தொழில் நிமித்தம் வந்த இருவர் முல்லைத்தீவு கொக்குளாய் கர்நாட்டுகேணிப்பகுதில் வாடியில் தங்கியிருந்துள்ளார்கள்.குறித்த இருவரும் போதைக்கு அடிமையாகி இருந்த நிலையில் நேற்று மாலை வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியநிலையில் நேற்றையதினம் (15.12.2024) இரவு நுவரெலியா பிரதேசத்தில் வசிக்கும் குடும்பஸ்தர் கண்டியில் வசிக்கும் மற்றைய நபரை அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் குறித்த விடயம் தொடர்பாக கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மரணமடைந்த நபரை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில்  சுந்தரராஜ் எனும் 38 வயதுடைய கண்டியினை சேர்ந்த நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நுவரெலியா மஸ்கெலிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய மற்றைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments