Thursday, December 12, 2024
HomeJaffnaமுல்லைத்தீவினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 5பேர் எலிக்காச்சலால் உயிரிழப்பு!

முல்லைத்தீவினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 5பேர் எலிக்காச்சலால் உயிரிழப்பு!

எலிக்காச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 5பேர் அண்மையில் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்கள் இன்று 10.12.2024 தெரிவித்துள்ளார்.
யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மை நாட்களாக வடக்கில் எலிக்காச்சல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ் போதான மருத்துவமனையில் நேரடியாக ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பருத்தித்துறை மருத்துவமனையில் இருந்து 3பேரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இருந்து ஒருவரும் இவ்வாறு அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள்.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் வயது 20,28,33,42,65 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.

மக்களுக்கான எச்சரிக்கை: தற்போது மாரிமழைபெய்துவருகின்றது மழைவெள்ளத்தில் செல்லாதீர்கள் விவசாயிகள் வயலில் செல்லும் போது உங்கள் கால்களுக்கு சப்பாத்துக்களை(மழைசப்பாத்து) அணிந்து செல்லுங்கள் குறிப்பாக விவசாயிகள் வெள்ளத்தில் சிக்குண்டவர்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் உற்பத்தியாகும் கசிப்பினை குடிப்பவர்கள் எலிக்காச்சலிலால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் ஆற்றங்கரைகளில் ஆற்றுத்தண்ணி மற்றும் வயல் தண்ணீர்களை ஊற்றியே மனிதனை கொல்லும் கசிப்பினை காச்சி வருகின்றார்கள் இந்த கசிப்பினை அருந்தும் பலரும் கடந்த காலங்களில் இவ்வாறு எலிக்காச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments