முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவுசெய்யப்படாமல் இயங்கிவரும் மருந்தகங்களை நீண்டகாலமாக கண்ணும் காணாமல் அரச அதிகாரிகள் இருந்து வருகின்றார்கள்.
மாவட்டத்தில் உள்ள மருந்தகங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்படவேண்டும் என்பது நியதி ஆனால் அவற்றில் சில மருந்தகங்கள் பதிவுசெய்து அரச நிபதந்தனைகளுக்கு உட்பட்டு இயங்கி வருகின்றன ஆனால் இன்னும் பதிவுகூட செய்யாத நிலையில் சில மருந்தகங்கள் இயங்கிவருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 மருந்தகங்களே காணப்படுகின்றன இவற்றில் 4 மருந்தகங்கள் மாத்திரம் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய மருந்தகங்கள் 5 பதிவுசெய்யப்படாமல் விதிமுறைகளை மீறி இயங்கி வருகின்றன இவற்றை அரச அதிகாரிகள் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது கவலையளிக்கின்றது
இவ்வாறான நிலையில் பதிவு செய்யப்படாத ஒரு மருந்தகத்தின் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள் அதனை இயங்கவிடாது செய்யும் நடவடிக்கையானது பாராபட்டசமான நடவடிக்கை என விசனம் தெரிவித்துள்ளார்கள்.
நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் பதிவுசெய்யப்படாமல் இருக்கும் அனைத்து மருந்தகங்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள் ஏன் இந்த பக்கசார்பான நடவடிக்கை