Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: December 2023

டிபெண்டர் வாகனம் மோதியதில் மாணவி படுகாயம்!

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியினை கடக்க முற்பட்ட மாணவி மீது டிபெண்டர் வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (28.12.2023) இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பரந்தன் வீதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற டிபெண்டர் வாகனம் வள்ளிபுனம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க…

புதுக்குடியிருப்பில் கனடா மாப்பிளையின் திருமணத்தில் சர்ச்சை!

கனடாவில் வதிவிட உரிமை பெற்ற 24 அகவையுடைய இளைஞனின் திருமணத்தில் சர்சை ஒன்று ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தினை சேர்ந்த குறித்த இளைஞன் பதிவு இல்லாத நிலையில் இரண்டு பெண்களுடன் குடும்பமாக வாழ்ந்து விட்டு ஒரு பெண்ணுக்கு பிள்ளை ஒன்றும் உள்ள நிலையில் தற்போது புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியினை சேர்ந்த யுவதியினை திருமணம் முடித்ததில் சர்சையான நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது….

மாந்தைகிழக்கு,துணுக்காய் பகுதிகளில் 6100 ஏக்கர் நெற்செய்கைஅழிவு!

கடந்த சில நாட்களில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் மாந்தை கிழக்கு- துணுக்காய் விவசாயிகளும் பாதிப்பு! வடக்கு கிழக்கு  எங்கிலும் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம், மற்றும் துணுக்காய்  கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய்   விவசாயிகளின் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுள்ளன வவுனிக்குள நீர்ப்பாசன திட்டத்தின் கீழான பாண்டியன்குளம் கமநல சேவை…

முல்லைத்தீவில் திடீரென நடந்த அபிவிருத்திக்குழுக்கூட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான இறுதி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இன்று மாலை 2.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கம் அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களது வரவேற்ப்புரையுடன்…

முல்லைத்தீவில் பெருமளவான துப்பாக்கிரவைகள் பெட்டிகளுடன் மீட்பு!

வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4500 இன்றையதினம்  (27.12.2023) மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில் குறித்த காணி உரிமையாளர் காணியில் மண்ணை அகழ்ந்தெடுக்கும் போது துப்பாக்கி ரவை பெட்டிகள் இருந்ததனை அவதானித்துள்ளார். அதனையடுத்து அப்பகுதியில் உள்ள கடற்படையினருக்கு தகவல்…

அம்பாளின் மகிமையினை கொச்சைப்படுத்தி பழிவாங்கும் செயல்-தி.இரவீந்திரன்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் செயலாளர் மற்றம் பாம்புக்கடிக்கு இலக்கானவர் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் இன்று 26.12.23 ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தி உண்மை சம்பவத்தினை வெளிக்கொண்டுவந்துள்ளார்கள். தி.இரவீந்திரன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் செயலாளர் மற்றும் பாம்புக்கடிக்கு இலக்கான கௌரிகரன்…

நாவல்காட்டு பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 5பேர் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டுப்பகுதியில் இந்தியாவில் இருந்து வருகைதந்த மூவர் உள்ளிட்ட 5பேர் புதையல் தோண்ட முற்பட்ட போது முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் கடந்த 19.12.2023 அன்று இடம்பெற்றுள்ளது.முள்ளியவளை  நாவல்காட்டுப்பகுதியில் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக தெரிவித்து இந்தியாவினை சேர்ந்த மூவரை அழைத்து புதையல் தோண்டுவதற்கான…

புதுக்குடியிருப்பில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் பொலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 22 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளான்.24.12.23 அன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் போதை மாத்திரைகள் விற்பனையாகி வருவதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய பொலீசார் இந்த சோதனை நடவடிக்கையினை…

பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தால்  முல்லைத்தீவில் 420 குடும்பங்களுக்கு உதவி!

பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தால் இன்றும்  முல்லைத்தீவில் 420 பேருக்கு  உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தால்  முல்லைத்தீவில் இன்றும் (24) 420 பேருக்கு   உலர் உணவு பொருட்கள் வழங்கி வைகப்பட்டது அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை காரணமாக ஏற்பட்ட  வெள்ள அனர்த்தம் காரணமாக  முல்லைத்தீவு…

முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக்கிற்கு கடுமையான உத்தரவு!

முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக் தொடர்பிலான விசாரணை முடிவடையும் வரை எந்தவிதமான கூட்டங்களோ , நிகழ்வுகளிலோ ஏற்பாடு செய்ய முடியாது அவ்வாறு மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்திற்கும் அனைத்து கழகங்களுக்கும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் (FFSL) சிறப்பு உத்தரவு ஒன்றினை வழங்கியுள்ளது. முல்லைத்தீவு உதைபந்தாட்ட சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட…