Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தால்  முல்லைத்தீவில் 420 குடும்பங்களுக்கு உதவி!

பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தால் இன்றும்  முல்லைத்தீவில் 420 பேருக்கு  உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தால்  முல்லைத்தீவில் இன்றும் (24) 420 பேருக்கு   உலர் உணவு பொருட்கள் வழங்கி வைகப்பட்டது

அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை காரணமாக ஏற்பட்ட  வெள்ள அனர்த்தம் காரணமாக  முல்லைத்தீவு மாவட்டத்தில் 2327 குடும்பங்களை சேர்ந்த 6916 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நிலையில்  கிளிநொச்சி மாவட்டத்தில் 2715 குடும்பங்களை சேர்ந்த 8606 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்

இவ்வாறான நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மழை வெள்ளம் காரணமாக நாளாந்தம் கூலி தொழிலுக்கு செல்கின்ற பாதிக்கப்பட்ட மக்களை உள்ளடக்கி முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு தரப்பினராலும் நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில் பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கி 1000 பேருக்கான உலருணவு பொதிகள் வழங்கும்  திட்டம்  நேற்று முன்தினம் (22)  புதுககுடியிருப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

ஒவ்வொண்றும் தலா 3500  ரூபா பெறுமதியான ஆயிரம் உலருணவு பொதிகளே  இவ்வாறு வழங்கி வைக்கப்பட இருக்கின்றது இந்நிலையில்  நேற்று முன்தினம் (22)  160 பேருக்கும் நேற்று  (23)  335 பேருக்கும் வழங்கப்பட்ட நிலையில் இன்று  மூன்றாவது   நாளாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான்  பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட  கற்சிலைமடு, முத்துஜயன்கட்டு, முத்துவிநாயகபுரம், பழம்பாசி ,பெரியகுளம்,ஒதியமலை    கிராம அலுவலர்  பிரிவுகளை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது நிகழ்வில் ஒட்டுசுட்டான் உதவி   பிரதேச செயலாளார் ரமேஸ் கிராம அலுவலர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு உலருணவு பொதிகளை வழங்கி வைத்தனர்

அத்தோடு துணுக்காய் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட 20 குடும்பங்களுக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட300  குடும்பங்களுக்கும்  உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *