Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: September 2023

புதுக்குடியிருப்பில் திலீபனுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தமிழர் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், புதுக்குடியிருப்பு நகரில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரின் வீதியில் 12…

முல்லைத்தீவில் மின்சார வேலியில் சிக்கிய காட்டுயானை உயிரிழப்பு!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கனகரத்தினபுரம் பகுதியில் விவசாயிஒருவரால் பாதுகாப்புக்காகபொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கிய காட்டுயானை ஒன்று 23.09.23 அன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கிராமத்தினரால் வனஜீவராசிகள் திணைக்களம்,மற்றும் பொலீசார்,கிராம சேவையாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து காட்டுயானை உயிரிழந்தமைக்கான காரணத்தினை வனஜீவராசிகள் திணைக்களத்தின் மருத்துவர்குழுவினர் 24.09.23 அன்று சென்று பார்வையிட்டு மின்சாரம் தாக்கியே யானை…

விடுதலைப்புலிகளின் வெடிபொருள்,தங்கத்தினை தேடி முள்ளிவாய்க்காலில் தோண்டல்!(Photos)

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமதியான பொருட்களை தேடி தோன்றும் நடவடிக்கை ஒன்று தற்போது இடம் பெற்று வருகின்றது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமதியான பொருட்களை தேடி தோன்றும் நடவடிக்கை ஒன்று 25.09.23  இடம் பெற்றுள்ளது.முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரை பகுதியில் இந்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது…

முல்லைத்தீவில் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தும் திணைக்களங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சில அரச திணைக்களங்கள் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி வருவதான குற்றச்சாட்டு எமது இணையத்தளத்திற்கு கிடைத்துள்ளது.மாவட்டத்தில் உள்ள சில பிரதேச சபைகள் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையிலும் இவ்வாறான சம்பவம் பதிவாகியுள்ளது அரச வாகனங்களை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்திவட்டு பதிவேட்டில் பிரதேச சபையின் வேலைக்காக சென்றமை,அரச…

முல்லைத்தீவில் 1368 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய LOLCநிறுவனம்!

Lolc நிறுவனத்தின் அனுசரணையுடன் வாழ்வின் சக்தி செயல் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது  முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலையங்களில் முல்லைத்தீவு கல்வி வலையம்,துணுக்காய்கல்வி வலயம்ஆகிய இரண்டு வலையங்களைச் சேர்ந்த 13 பாடசாலைகளை சேர்ந்த 1368 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன….

முல்லைத்தீவில் 50 மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கிவைத்த நிறுவனம்!

பாதுகாப்போம் நாளைய வீரர்களை” மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கி வைப்பு. “பாதுகாப்போம் நாளைய வீரர்களை” என்னும் தொனிப்பொருளில் அலியான்ஸ் நிறுவனத்தினரால் பாதுகாப்பு தலைக்கவசம் வழங்கும் சமூக நல நிகழ்ச்சி திட்டம் முல்லைத்தீவில் (22.09.23) முன்னெடுக்கப்பட்டது. ஆயிரம் மாணவர்களை இலக்காக கொண்டு 2022 ஆரம்பிக்கப்பட்ட அலியான்ஸ் புரோடெக்ட் செயற்திட்டம் வெற்றியளித்ததன் காரணமாக  2023 ஆண்டும் ஆயிரம் தலைக்கவசங்களை மாணவர்களுக்கு…

காலநிலை மாற்றம் தொடர்பான செயலமர்வு!

காலநிலை மாற்றம் தொடர்பான செயலமர்வு ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (22.09.23) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது. சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் ஆசிய பசுபிக் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அமைப்பின் யாழ் வளவாளராக பீற்றர் சேவியர் கலீஸ் கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினார்….

யோகபுரம் மா.வி மாணவர்களுக்கு நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு!

இன்று (21.09.2023) முல்லைத்தீவு மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட யோகபுரம் மகாவித்தியாலயத்தின் தரம் 10, 11, மற்றும் உயர்தர மாணவர்களுக்கான சவால்களை எதிர்கொண்டு வழப்பழகுதல் என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மாணவர் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்கள் தமது மன அழுத்தங்களை…

முல்லைத்தீவில் பதிவுசெய்யப்படாமல் இயங்கி வரும் மருந்தகங்கள் கட்டுப்படுத்த தவறும் அதிகாரிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவுசெய்யப்படாமல் இயங்கிவரும் மருந்தகங்களை நீண்டகாலமாக கண்ணும் காணாமல் அரச அதிகாரிகள் இருந்து வருகின்றார்கள். மாவட்டத்தில் உள்ள மருந்தகங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்படவேண்டும் என்பது நியதி ஆனால் அவற்றில் சில மருந்தகங்கள் பதிவுசெய்து அரச நிபதந்தனைகளுக்கு உட்பட்டு இயங்கி வருகின்றன ஆனால் இன்னும் பதிவுகூட செய்யாத நிலையில் சில மருந்தகங்கள் இயங்கிவருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 9…

சரணடைந்தவர்களை படுகொலை செய்துவிட்டு கொக்குத்தொடுவாயில் குழி தோண்டி புதைத்துள்ளனர்!

சரணடைந்தவர்களைப் படுகொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக உள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து…