Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

விடுதலைப்புலிகளின் வெடிபொருள்,தங்கத்தினை தேடி முள்ளிவாய்க்காலில் தோண்டல்!(Photos)

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமதியான பொருட்களை தேடி தோன்றும் நடவடிக்கை ஒன்று தற்போது இடம் பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமதியான பொருட்களை தேடி தோன்றும் நடவடிக்கை ஒன்று 25.09.23  இடம் பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரை பகுதியில் இந்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது

முல்லைதீவு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் பாரியளவிலான வெடி பொருட்கள் மற்றும் தங்கங்கள் முக்கிய பொருட்கள் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கருதி முல்லைத்தீவு பொலீசாரல் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் குறித்த பகுதியினை அகழ்வு செய்வதற்கு இன்று 25.09.23 நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடற்கரையில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரம் கொண்ட கரைப்பகுதியில் ஆல மரம் ஒன்றும் சிறு பனை வடலிகளும் காணப்படும் மணல்புட்டி கொண்ட பகுதியில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையிலும் தொல்பொருள் திணைக்களம் கிராம சேவையாளர் போலீசார் சிறப்பு அதிரடிப்படையினர் பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையிலும் இந்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது

இந்த பகுதியில் கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்டுள்ளது இன்று மாலை 3.00 மணிதொடக்கம் 6.00 மணிவரை தோண்டப்பட்ட போது நிலத்திற்குள் இருந்து தகரங்களும்,ஒலிநாடா ஒன்றும் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நிலத்தினை தோண்ட தோண்ட நீர்வரத்தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் புதைக்கப்பட் பொருட்கள் காணப்படுவதாக பொலீசாரால்  நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாலை 6.00 மணியளவில் அகழ்வு பணி நிறைவிற்கு கொண்டுவரப்பட்டு நாளை 26.09.23 காலை 9.00 மணிக்கு குறித்த பகுpயில் மீண்டும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஏற்கனவே தொண்டப்பட்டுள்ள நிலையில் அடையாளப்படுத்தப்பட்டு அதற்கு அண்மித்த பகுதியில் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த அகழ்வு பணி இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வு பணியில் எந்தவித தடையப் பொருட்களும் கிடைக்காத நிலையில் மீண்டும் நாளை காலை 9 மணியிலிருந்து அகழ்வு பணி முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *