Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: March 2023

முத்தயன்கட்டு குளத்தின் கீழ் 3320.5 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை!

முத்தயன்கட்டு குளத்தின் கீழ்   3320.5 ஏக்கர்  நெற்செய்கைக்கும்  739 ஏக்கரில்  உப உணவு பயிர்ச்செய்கைக்கும் தீர்மானம்   முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட முத்தயன்கட்டு குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பான கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமையில் நேற்றைய தினம் (21.03.2023)  ஒட்டுசுட்டான் நீர்பாசன திணைக்களத்தின் அலுவலகத்தில்…

முல்லைத்தீவில் மாணவர்கள் இன்மையால் 2 பாடசலைகளுக்கு மூடு விழா!

வடமாகாணத்தில் பாடசாலைகளில் மாணவர்கள் இன்மையால் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் 49 பாடசாலைகளும்,கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பாடசாலைகளும்,மன்னார் மாவட்டத்தில் 10 பாடசாலைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பாடசாலைகளும்,வவுனியா மாவட்டத்தில் 34 பாடசாலைகளும் இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு கல்விவலயத்தில் இந்த எண்ணிக்கை…

முல்லைத்தீவில் நீர்கொழும்பு வாசிக்கு 46 ஏக்கரில் காணி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் கொக்கிளாய் கடல் நீர் ஏரியினை அண்மித்த கடற்கரைப்பகுதியில் நீர்கொழும்பில் உள்ள தனி நபர் ஒருவருக்கு 46 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்வதற்கான காணிஅளவீட்டு மதிப்பாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளருக்கோ மாவட்ட செயலாளருக்கோ எந்தவித அறிவிப்புக்களும் வழங்காத நிலையில் மகாவலி அபிவிருத்தி திட்டம் இந்த நடவடிக்கையினை…

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

கிளிநொச்சி அக்கராயன் பகுதி வன்னேரிக்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கில்கள் மேதிக்கொண்டதில் படுகாயமடைந்த இருவாரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 34 அகவையுடைய வசந்தறூபன் சுமன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த இருவரும்…

அடம்பன் விபத்தில் இளைஞன் பலி!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியில் இன்று (21) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடம்பனில் இருந்து உயிலங்குளம் நோக்கி வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்….

மான்னுருவி பகுதியில் அரைக்கும் ஆலையினை அரைத்து தள்ளிய யானை!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மான்னுருவி பகுதியில் நாகரத்தினம் பாஸ்கரன் என்பவரின் அரைக்கும் ஆலைக்குள்  யானை புகுந்து துவம்சம் செய்துள்ளது. குறித்த பகுதியில் அரைக்கும் ஆலைவைத்து தமது வாழ்வாதாரத்தினை கொண்டு நடத்திய நபரின் அரைக்கும் ஆலைக்குள் நேற்று 19.03.23 இரவு புகுந்த காட்டுயானை அரைக்கும் ஆலையின் ஒருபகுதி சுவரினை உடைத்து வீழ்ந்தியுள்ளதுடன் மா அரைக்கும் இயந்திரம் மற்றும் தூள்…

விவசாயிகளுக்கு இலவச உரம்- ஏக்கருக்கு 14 கிலோ!

ன்று போகங்களின் பின்னர் நாட்டிலுள்ள 12 இலட்சம் விவசாயிகளுக்கு இன்று(20) முதல் இலவசமாக PST உரம் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 36000 மெட்ரிக் தொன் PST உரம்  ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அதில் 11537 மெட்ரிக் தொன் உரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து…

காலணி தொழில்சாலையில் 9இலட்சம் பெறுமதியான காலணிகளை திருடியவர் கைது!

தென்னிலங்கையில் உள்ள மாதம்பை பழைய நகரில் உள்ள பெண்களுக்கான காலணி தயாரிக்கும் தொழில்சாலையில் தொடச்சியாக 9 இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதியான 355 சோடி பெண்களுக்கான காலணிகளை திருடியவர் பொலீசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். இரவு நேரத்தில் தொழில்சாலைக்குள் நுளைந்து ஜன்னலை உடைத்து அங்கிருந்த காலணிகளை திருடி சென்றுள்ளதாக மாதம்பை பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலீஸ் குற்றப்புலனாய்வு…

பிரான்சில் இருந்து வருகைதந்த 200 பெண்கள் இலங்கைக்கு கிடைக்ககும் வரவேற்பு!

ரெய்ட் அமேசன்ஸுக்காக 200 வெளிநாட்டு பெண்கள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். ரெய்ட் அமேசன்ஸ் மகளிர் சாகச விளையாட்டு விழா, நேற்று கண்டியில் ஆரம்பமானதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பங்குபற்றும் 200 பெண்கள் அடங்கிய குழுவினர், பிரான்சில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இலங்கைக்கு…

யாழ்-வல்லிபுரஆழ்வார் கோவிலில் படப்பிடிப்பு-நடன இயக்னர் பாபா பாஸ்கர்!

யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலில் நாளை 21.03.23 நடைபெறவுள்ள தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பிற்காக இந்தியாவின் பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் கொண்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்றுவந்துள்ளார்கள் குறிப்பாக நல்லூர் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். Zee தமிழ் தொலைக்காட்சியின் தொடருக்கான…