Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

விபத்தில் உயிரிழந்த பிரதேச சபை உத்தியோகத்தர் நினைவாக நினைவாலயம்!

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் கடந்த 12.01.2024 அன்று இராணுவத்தினரின் உழவு இயந்திரத்துடன் மோதுண்ட விபத்தில் உயிரிழந்த அன்ரன் பிலிப்பின்தாஸ் நினைவாக 11.02.2024 அன்று வெற்றிலைக்கேணி பகுதியில் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த குடும்பஸ்தரின் நினைவாக அவரை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த அதே இடத்தில் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பங்குத்ததை அமல்ராஜ்அடிகளார்,தேசபந்து றமேஷ் அமதி அடிகளார் உள்ளிட்ட பொதுமக்கள் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவிலான வெளிமாவட்டங்களை சேர்ந்த அரச உத்தியேகத்தர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள் இவர்கள் விடுமுறை நட்களில் தங்கள் வீடுகளுக்கு செல்வது வளக்கம் இவ்வாறு வீடுகளுக்கு செல்பவர்கள் பேருந்துக்களில் அதிமாக பயணிக்கின்றார்கள் பேருந்துக்கள் விபத்துக்களின் போதும் அவர்கள் உயிரிழப்பு போன்ற ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் உந்துருளிகளில் பயணிப்பவர்கள் அவதானமாக சென்றாலும் விபத்துக்கள் நடப்தை தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றது.
இவ்வாறு பல குடும்ப கஸ்ரங்களை சுமந்து கஸ்ரப்பட்ட பிரதேசத்தில் 5 ஆண்டுகள் கடமையாற்றவேண்டும் என்பதற்காக பலர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கள் கடமைகளை ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *