Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

வெள்ளம் வழிந்த பின்னரும் மீளெழும்ப முடியாத நிலையில் சிராட்டி குளம் கிராம மக்கள்!

19.12.23 முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிராட்டி குளம் கிராமம் வெல்ல அனர்த்த நிலைமை காரணமாக யாரும் உட்செல்லவோ வெளிச்செல்லவோ முடியாத சூழ்நிலையில் தரைவழி போக்குவரத்து  கடந்த 2,3 நாட்களாக காணப்பட்டிருந்தது

எனினும் இன்றைய தினம் வெள்ளம் வழிந்தோடிய பின்னர் குறித்த கிராமத்திற்கான தரைவழி  போக்குவரத்து இன்று அதிகாலையில் இருந்து  சீரான நிலைமையில் இருந்தது

கடந்த நாட்களில் பறங்கியாறு பெருக்கெடுத்த நிலையில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்திருந்தது

இதனால் வெள்ளம் வழிந்தோடிய பின்னரும் வீடுகள் தண்ணீர் இருந்தமையால் இதுவரை உணவுகளை கூட தயார் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்

மேலும் பாடசாலை மாணவர்களின் புத்தகங்கள் வெள்ள நீரினால் நனைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

மேலும் தாம் உறங்குவதாயின் தமது வீடுகளில் படுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் , உறவினர் வீடுகளுக்கு சென்றே தாம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்

இதேவேளை வவுனிக்குளமானது 1.2 அடி வான்பாய்கின்றது 

இதேவேளை இன்று (19) காலை 9 மணி வரையான தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு, பூவரசங்குளம்,விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 286 குடும்பங்களை சேர்ந்த 952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன், கூழாமுறிப்பு ,கனகரத்தினபுரம் ,காதலியர்சமனங்குளம் ,தண்டுவான்,ஒட்டுசுட்டான்,பழம்பாசி ,பேராறு ,மணவாளன்பட்டமுறிப்பு , கணேசபுரம்,கருவேலன்கண்டல் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 384 குடும்பங்களை சேர்ந்த 1436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதேபோன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை , தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு ,கொக்கிளாய் வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 376 குடும்பங்களை சேர்ந்த 1160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம்,உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான் ,மல்லாவி,யோகபுரம் கிழக்கு, புகழேந்திநகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு, அம்பலப்பெருமாள்குளம் ,அமைதிபுரம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கன்குளம்,துணுக்காய், யோகபுரம் மத்தி, திருநகர் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 254 குடும்பங்களை சேர்ந்த 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு, தேவிபுரம்,மாணிக்கபுரம்,உடையார்கட்டு வடக்கு,உடையார்கட்டு தெற்கு மற்றும் வள்ளிபுனம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 459 குடும்பங்களை சேர்ந்த 1239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிஓயா பிரதேச செயலக பிரிவி ல்குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1866 குடும்பங்களை சேர்ந்த 5588 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

402 குடும்பங்களை சேர்ந்த 1189 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *