Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவில் மின்சார சபை என போலி நபர்களால் பணம் பறிப்பு!

முல்லைத்தீவு உடுப்புக்குளம் தூண்டாய் கிராமத்தில் மின்சார சபையின் மின் இணைப்பை துண்டிப்பவர்கள் என தங்களை அறிமுகம் செய்த நபர்கள் பல மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக தெரிவித்து ஒருதொகை பணத்தினை அபகரித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தூண்டாய் கிராமத்தில் பல மக்கள் நாளாந்தாம் கூலிவேலை செய்து குடும்பத்தினை கொண்டு செல்பவர்கள் அவர்களின் ஆண்கள் வேலைகளுக்கு சென்ற நிலையில் வீட்டில் பெண்கள் இருந்த வேளை கடந்த் 27.12.2023 அன்று உந்துருளியில் சென்ற இருவர் மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சார கட்டணம் கட்டாத மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை வெட்டப்போவதாக சொல்லியுள்ளார்கள் இந்த நிலையில் வீட்டில் இருந்த பெண்கள் மின்சாரத்தினை வெட்டாதேங்கோ என்று சொல்லியுள்ளார்கள்
மின்சாரம் வெட்டவந்தால் தாங்கள் வெட்டிவிட்டுத்தான் போகவேண்டும் அப்படி இல்லாவிடின் கட்டும் பணத்தில் ஒருதொகுதியினை தாருங்கள் நாங்கள் செல்கின்றோம் என கேட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் பல குடும்பங்கள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பணத்தினை கொடுத்துள்ளார்கள்
இந்த நிலையில் கடந்த 28.12.2023 அன்று மின்சார பட்டியல் கொடுக்கும் நபர் வீடுகளுக்கு வந்து மின்சார பட்டியலை கொடுத்துள்ளார் இதன் போது சம்பவத்தினை மக்கள் தெரியப்படுத்தியுள்ளார்கள்

மின்சார பட்டியல் கொடுப்பவர் சொல்லியுள்ளார் மின்சாரம் துண்டிப்பு தொடர்பில் எவரும் அப்படிவரவில்லை இந்த நிலையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்த மக்கள் முல்லைத்தீவில் உள்ள மின்சார சபையிடம் வந்து முறையிட்டுள்ளார்கள் அவர்கள் ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிவித்துள்ளதுடன்
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பெயர் விபரங்கள்,மின்கட்டண விபரங்கள் எல்லாம் எவ்வாறு அவர்களுக்கு தெரியும் என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்கள். மின்சார சபை நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையில் முல்லைத்தீவு பொலீஸ் நிலையம் சென்று முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் மின்சார பட்டியல் வழங்குபவர் ஒருவரை கேட்டபோது தற்போது மின்சாரம் துண்டிப்பு என்பது நிறுத்தப்பட்டுள்ளது உயர்தர பரீட்சை காரணமாக மின்சார நிலுவையினை செலுத்தாவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தூண்டாய் கிராமத்தில் சுமார் பத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *