Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

 மனைவியை கொலை செய்து  புதைத்த இளம் குடும்பத் தலைவன் கொழும்பில் கைது!

முள்ளியவளையில் மனைவியை கொலை செய்து  புதைத்த இளம் குடும்பத் தலைவன் கொழும்பில் கைது பெண்ணின் உடலம் மீட்பு..

முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வசித்த இளம் குடும்பத்தினை காணவில்லை என உறவினர்களினால் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு காணாமல் போன இளம் குடும்பத்தின் காணாமல் போன பெண்ணின் தயாரால்  23.10.2023 இன்று முறையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்
புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாராத்தில் வசிக்கும் குறித்த தயார் தனது மகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளார் முள்ளியவளை யினை சேர்ந்த மருமகன் வயது 23 இவர்கள் இருவரும் கடந்த மாதம் முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கிவாழ்ந்துள்ளார்கள்.

தனது மகள் தன்னுடன் தொலைபேசியில் உரையாடுவதாகவும் கடந்த 21.10.23 திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி சுவிச்ஓப் செய்யப்பட்ட நிலையில் 23.10.23 அன்று மகளும் மருமகனும் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இருவரின் தொலைபேசிகளும் தொடர்புகொள்ளமுடியாது ஓப் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாகமண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்படுகின்றது இதனால் சந்தேகம் அடைந்த தாயார் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

தனது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டு அமைவாக முள்ளியவளை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி k.H.k.சன்கீத்(K.H.K.sangeeth) தலைமையிலான குழுவினர்கள் விசாரணையை மேற்கொண்டு விசாரணையை துரிதப்படுத்தி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது கொழும்பு வெல்லம் பிட்டிய பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மனைவி கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது

இன்னிலையில் 24-10-23 இன்று
அவரது இளம் மனைவி புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு அமையா குறித்த பகுதியிணை தோண்டும்  நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.


வாடகைக்கு இருந்த வீட்டின் மலசலகூட குளிக்கு அருகில் புதைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் சட்டவைத்தி அதிகாரி க.வாசுதேவா தடையவியல் பொலீசார் கிராம சேவையாளர் சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியேர் முன்னிலையிலும் ஆகழ்வு பணிகளை முன்னெடுத்துள்ளார்கள்


மலசல கூட குழிக்குஅருகில் சுமார் ஐந்து அடி ஆழத்தில் குறித்த பெண்ணின் உடலம் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது பெண்னின் உடலம் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணை முள்ளியவளை போலீசார் மேற்கொண்டுவருகின்றார்கள்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *