Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் போதைப்பொருள் வியாபாரத்தினை யாரால் கட்டுப்படுத்த முடியும்?

புதுக்குடியிருப்பில் போதைப்பொருள் வியாபாரத்தினை யாரால் கட்டுப்படுத்த முடியும்?

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பெயர் குறிப்பிட்டு கூறக்கூடிய சில கிராமங்களில் இன்றும் தொடர்ச்சியாக போதைப்பொருள் வியாபாரங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவற்றை கட்டுப்படுத்துவதாக புதுக்குடியிருப்பு பொலீசார் கூறிக்கொண்டாலும் சில செல்வாக்கு மிக்கவர்கள் பொலீசாரின் பின்னணியில் செயற்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

இந்த நிலையில் ஒரு சிலர் மீது சட்ட நவடிக்கைகள் பாய்கின்றன ஆனால் முக்கிய புள்ளிகள் மீது அது கண்டு கொள்வதில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.
பொலீசாரின் நடவடிக்கையில் நாங்கள் குறைகூற வில்லை மக்களின் நடவடிக்கை சரியாக இருந்தால் சரி.

இந்த நிலையில் அண்மையில்

புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சட்டவிரோத போதை உற்பத்தி , விற்பனை, பாவனையை முற்றாக ஒழிக்க மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

தற்காலத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, போதைப்பொருள் பாவனையால்  இளம் சமுதாயத்தினர் தம் எதிர் காலத்தையை இழந்து விடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு,  கர்ணண் குடியிருப்பு பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை ஒழிக்க குறித்த பகுதி மக்களுக்கும் , புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் உள்ளிடட்ட குழுவினருக்கும் இடையில் நேற்றையதினம் (18.01.2024) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலில் போதை  ஒழிப்பது தொடர்பாகவும், அதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.  இக்கலந்துரையாடலின் போது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் எந் நேரத்திலும் போதை ஒழிப்பு தொடர்பான  விடயங்களை அறியப்படுத்துமாறும், எந்நேரமும்  தாம் உதவி செய்ய  தயாராக இருப்பதாகவும், போதைப்பாெருள் பாவனையை ஒழிக்க தம்மால் முடிந்த உதவிகளை செய்வதாகவும் கூறியிருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் கர்ணண் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தினர், இளைஞர்கள், பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து  கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இது பொலீசாரின் விளம்பரத்திற்காக போடப்படும் செய்தி அல்ல பொலீஸ் பக்கத்தினால் கிடைக்கப்பெற்ற செய்தி/

புளியடியில் கசிப்பு வியாபாரம் இடம்பெறுவது தெரியாத பொலீசாரின் கண்ணுக்கு மல்லிகைத்தீவு காட்டுக்குள் கிடந்த துப்காகி ரவைகள் பட்டென தெரிந்தது மக்கள் புலம்பல்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *