Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தரின் தவறான முடிவு!

வடமாகாணத்தில் தவறான முடிவுகளை எடுத்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.

மனித வாழ்வில் சாதாரண ஒருவிடையத்தினை கூட ஏற்றுக்கொண்டு வாழமுடியாத நிலைக்கு இன்று மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளார்களாக என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு இடம்மாற்றத்திற்காக அரச உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவு எடுப்பது மக்களுக்கான சேவையினை வழங்கும் அரச உத்தியோகத்தர்களின் மன நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதை சிந்தித்து பார்க்கவைத்துள்ளது.

இவ்வாறுதான் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் 49 அகவையுடைய டச்சுவீதி மூளாய் சுழிபுரம் பகுதியினை சேர்ந்த திருமணமாகாத பேரம்பலம் புனிதா என்ற அரச உத்தியோகத்தர் கடந்த காலங்களில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

இவ்வாறு அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தினை அவர் ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் இடமாற்றத்தினை இரத்துசெய்தற்கு முயற்சித்துள்ளார் அந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில் இன்று 12.02.2024 அவரது வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு மனதளவில் பாதிக்கப்பட்ட நிலையில் அரச உத்தியோகத்தர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் இவ்வாறான சிக்கல்களில் உள்ளவர்களுக்கு சரியான ஆற்றுகைப்படுத்தல் வேண்டும் வடமகாணத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இனம் கண்டு அவர்களுக்கான உளவளத்துணை சேவைகளை வழங்கவேண்டும் இவ்வாறு உளவளத்துணை சேவையினை மக்களுக்கு வழங்குவதற்காக பல நிறுவனங்கள் பல மில்லியன் ரூபாய்களை செலவு செய்து அலுவலகங்களை அமைத்து சேவையாற்றி வந்தாலும் வடக்கில் தவறான முடிவினை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது

தற்கொலை ஒரு முடிவல்ல உங்களுக்கும் பல பிரச்சினைகள் காணப்படும் இவ்வாறு காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகள் உள்ளன அதற்காக தவறான முடிவு எடுத்தால் பிரச்சினைககள் தீர்ந்துவிடும் என்பதல்ல இந்தல உலகில் வாழ்வதற்காகவே மனித பிறவியினை கடவுள் உருவாக்கினான் சாவு அனைவருக்கும் வரும் அது வரும் போது ஏற்றுக்கொள்ளவேண்டும் அதுவரை தடைகளை தாண்டி மனிதவாழ்க்கையினை அர்த்தமுள்ள வாழ்வாக மாற்றி அமைக்கவேண்டும்.
இன்று வடமாகாணத்தில் இவ்வாறான தவறான முடிவுகைள எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.
உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் இவ்வாறான பிரச்சினைகளில் சிக்கி இருந்தால் அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை சொல்லிக்கொடுங்கள் அவர்களையும் இந்த மனிதப்பிறப்பின் அர்த்தத்தினை புரிந்து வாழ வழிசெய்யுங்கள்
.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *