Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

கற்சிலை மடுவில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் நிகழ்வு!

கற்சிலை மடுவில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் நிகழ்வும் உழைப்போர் மதிப்பளிப்பு நிகழ்வும்

“நம்பி கை கொடுப்போம் நம்பிக்கை கொடுப்போம்” எனும் மகுட வாசகத்துடன் மக்களுக்காக பல்வேறு சமூகநலப் பணிகளை ஆற்றி வரும் ஏர் நிலம் தொண்டமைப்பின் நான்காவதாண்டு பொங்கல் விழாவும் உழைப்போர் மதிப்பளிப்பு நிகழ்வும்       “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” எனும் தொனிப்பொருளில் இன்று(11) கற்சிலைமடு மாவீரன் பண்டாரவன்னியன் சிலை வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் சின்னப்பா நாகேந்திரராசா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு பாரம்பரிய பொங்கல் நிகழ்வும் அதனை தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன

இறுதியாக விவசாய துறையின் முதுசமாக திகழும் கற்சிலைமடு ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த திரு திருமதி கிட்டிணபிள்ளை இராசமணி தம்பதியினர்

பனந்தொழில் வல்லுனராக முதுசமாக திகழும்  சிலையடி கற்சிலைமடு  ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த திரு திருமதி சகுந்தர்ராஜா சிவதலம் தம்பதியினர்

கைம்பணி துறையின் முதுசமாக திகழும் கற்சிலைமடு ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த  திருமதி விஜயரத்தினம் சுசிலாதேவி  தம்பதியினர்

விவசாய துறையின் முதுசமாக திகழும் கனேசபுரம் ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த திரு திருமதி நாகராசா சோதிப்பிள்ளை தம்பதியினர்

விவசாய துறையின் முதுசமாக திகழும் முத்துவிநாயகபுரம் இரண்டாம் கண்டம் ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த திரு திருமதி சிவராஜா கலைவாணி தம்பதியினர்

விவசாய துறையின் முதுசமாக திகழும் பண்டாரவன்னி ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த திரு திருமதி கந்தசாமி இராசமணி தம்பதியினர்

விவசாய துறையின் முதுசமாக திகழும் பேராறு ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த திரு திருமதி கிருஸ்னசாமி ஜானகி  தம்பதியினர்

விவசாய துறையின் முதுசமாக திகழும் மன்னாகண்டல் ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த  திரு திருமதி இராசையா பாக்கியம் தம்பதியினர்

விவசாய துறையின் முதுசமாக திகழும் கூழாமுறிப்பு  ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த  திரு திருமதி சின்னராசா மேரியம்மா தம்பதியினர்

விவசாய துறையின் முதுசமாக திகழும் பழம்பாசி ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த  திரு திருமதி பத்மநாதன் விமலா  தம்பதியினர்

ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவு கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கைலாயநாதன் சுதர்சன் ஏர்நிலம் அமைப்பின் ஆலோசகர் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி அதிபர் இ.சூரியகுமாரி சட்டத்தரணி கனகரத்தினம் பார்த்தீபன் ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலைய குழுத்தலைவர் இ.வேதநாதன் ஒட்டுசுட்டான் மற்றும் முத்துவிநாயகபுரம் கிராம அலுவலர் லலிதா நிவேகாந்தன் ஆயுள்வேத வைத்தியர் நாகமணி வன்னியசிங்கம் மற்றும் ஏர் நிலம் அமைப்பினை சாந்தவர்கள் கலைஞர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *